விஜய் டிவி பக்கமே வரமாட்டேன்னு சொன்ன பாவனா மீண்டும் சூப்பர் சிங்கருக்கு வந்தது ஏன்? அவரே கொடுத்த விளக்கம்.

0
444
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பிரபலமாகுவதற்கு முன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் மக்கள் மனதில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள். அந்த வகையில் ஒரு காலத்தில் விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்தவர் பாவனா. இவர் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

பின் இவருக்கு கிரிக்கெட் விளையாட்டை தொகுத்து வழங்கும் வாய்ப்பு வந்தவுடன் அங்கு சென்று விட்டார். பிறகு விஜய் டிவி பக்கமே வரவில்லை. கிரிக்கெட், படத்தின் விழா, நிகழ்ச்சி மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரை பக்கம் வந்தார் பாவனா. ஆனால், விஜய் டிவியில் இல்லாமல் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த டான்ஸ் ஷோவை பாவனா தொகுத்து வழங்கிக் இருந்தார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய் டிவி சூப்பர் சிங்கரில் ஆங்கராக வந்துள்ளார். இதுகுறித்து பதிவுட்டுள்ள அவர் ‘6 வருஷம் ஆகிடுச்சு, உங்கள் கடிகாரத்தை ரீவைண்டு செய்ய வேண்டிய நேரம் இது. இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பாருங்கள். அதில் 3 எபிசோடுக்கு மட்டும் கெஸ்ட் ஹோஸ்ட் ஆக நான் மீண்டும் திரும்பி வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. என்னை சமாதானப்படுத்தி திருப்பி அழைத்து வந்த சூப்பர் சிங்கர் டீமுக்கு நன்றி. இந்த மேடை நிரந்தரம் அல்ல தற்காலிகமானது தான். ஸ்டார் ஸ்போர்ட்ஸில் தொடங்கி உள்ள கபடி தான் என்னுடைய முக்கியமான வேலை’ என்று பதிவிட்டுள்ளார்.

இது ஒரு பக்கமிருக்க பேட்டி ஒன்றில் பங்கேற்ற பாவனா ‘எல்லோரும் விஜய் டிவி பக்கம் போவீங்களா? என்று கேட்டார்கள். ஐபிஎல், உலக கோப்பை ஸ்போர்ட்ஸ் உடன் தலைவி, RRR சினிமா நிகழ்ச்சியை தொகுத்து வந்தேன். இதற்கு கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும். சமீபத்தில் ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை கொண்டாடிய நிகழ்வை நான்தான் தொகுத்து வழங்கினேன்.முதலமைச்சர் ஸ்டாலின், தோனி ரெண்டு பேரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

அந்த நிகழ்ச்சியை நான் மறக்கவே முடியாது. இது ஒரு பக்கம் இருக்க, எல்லோரும் நீங்கள் விஜய் டிவி பக்கம் போவீங்களா? என்று கேட்டார்கள். அதற்கு நான் இனி விஜய் டிவி பக்கம் போகவேண்டாம் என்று நினைத்திருக்கிறேன். ஏன்னா, அவங்க ஸ்டைல் வேற, இப்ப என் ஸ்டைல் வேற ஆகிவிட்டது. மேலும், அவங்க இப்ப நிகழ்ச்சியை காமெடியாக கொண்டு போவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்.

எனக்கு அதில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை. அதைவிட ஜெயா டிவியில் முதன் முதலாக எனக்கு வாய்ப்பு வெங்கட் ரமணி சார் தான் கலர்ஸ்-தமிழ் சோவுக்கு கூப்பிட்டார். நாம் எவ்வளவு உயரத்தில் போனாலும் கடந்து வந்த பாதையை மறக்கக் கூடாது என்று நினைத்து தான் நான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறேன். இப்போது கலர்ஸ்-தமிழ் டீமுடன் ஜாலியாக போகிறது என்று கூறினார் என்பது குறிப்புடத்தக்கது.

Advertisement