அட்லீயின் “ஜவான்” படத்தில் நடிக்க மறுத்த தெலுங்கு Pan India ஸ்டார் ? – காரணம் இது தானா ?

0
274
atlee
- Advertisement -

பாலிவுட் சினிமாவில் இயக்குனர் அட்லீ இயக்க ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நடிகர் நடிக்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அட்லீ திகழ்ந்து வருகிறார். இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார்.

-விளம்பரம்-

இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தார். இதில் விஜய்யை வைத்து முதலாக தெறி என்ற படத்தை இயக்கி இருந்தார். ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி இந்த படம் ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக இருந்ததால் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

- Advertisement -

ஷாருக்கான்-அட்லீ படம்:

இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார். பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார். அதோடு அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

ஜவான் படம்:

மேலும், இந்த படம் அதிரடி, ஆக்சன் கதைக்களத்தை கொண்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஜவான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் வரும் ஜூன் இரண்டாம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

-விளம்பரம்-

அல்லு அர்ஜுனை அணுகிய படங்குழு :

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு கேமேயோ கதாபாத்திரம் வரும் என்று முன்னரே படக்குழு அறிவித்திருந்தது. மேலும் அந்த கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை படக்குழு அணுகியிருக்கிறது. ஆனால் “ஜவான்” படத்தின் கதையை கேட்ட அல்லு அர்ஜுன் நடிக்க முடியாது சொன்னதாக கூறப்படுகிறது. நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தின் மூலம் இந்தியா முழுவது பிரபலமானார். இதனையடுத்து தற்போது அல்லு அர்ஜுன் புஷ்பா பாகம் 2ல் நடித்து வருகிறார்.

மறுத்த அல்லு அர்ஜுன் :

இந்த காரணத்தினால் தான் “ஜவான்” படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலைக்கு அல்லு அர்ஜுன் தள்ளப்பட்டு அப்படி சொல்லியிருக்கிறார் என்று ஒரு தரப்பு கூறுகிறது. இருந்தாலும் ஷாருக்கான் முன்னதாக நடித்த “பதான்” படம் பெரியளவில் ஹிட் அடித்து 900 கோடிகளுக்கு மேலே வசூல் செய்து வருகிறது. இந்நிலையில் பாலிவுட் படத்தின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் படத்தில் அல்லு அர்ஜுன் நடித்திருந்தால் அது புஷ்பா 2 படத்திற்கு உந்துதலாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

Advertisement