விஜய் மகன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கும் பிரபலம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் பெரும்பாலும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் செய்திருக்கிறது. அந்த வகையில் கடைசியாக விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியிருந்த லியோ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதை எடுத்து தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து விஜய் அவர்கள் தளபதி 69 என்ற படத்தில் நடிக்கிறார். இது தான் இவருடைய கடைசி படம் என்று கூறப்படுகிறது. மேலும், இவர் கடைசியாக நடிக்க இருக்கும் தளபதி 69 படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என்ற தகவல் தெரியவில்லை. இந்த நிலையில் விஜய்யின் மகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கும் தகவல் தான் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
ஜேசன் சஞ்சய் குறித்த தகவல்:
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய். வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு ஒரு சின்ன டான்ஸ் ஆடியிருப்பார் சஞ்சய். அதனை தொடர்ந்து சில படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்து இருந்தார். பின் இவர் கனடாவில் ஃபிலிம் மேக்கிங் படித்து முடித்து இருக்கிறார். மேலும், இவர் சில குறும்படங்களை இயக்கி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து. இதுவரை இவர் ஜங்க்ஷன் மற்றும் சிரி என்ற குறும்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த இரண்டு குறும்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.
ஜேசன் சஞ்சய் இயக்கும் புது படம்:
இப்படி ஒரு நிலையில் இவர் இறுதியாக இயக்கிய ‘Pull The Trigger’ என்ற குறும்படம் நன்றாகவே இருந்ததது . அதே போல இதற்கு முன்னர் இவர் இயக்கிய குறும்படங்களை விட இதில் தரமும் நன்றாகவே இருந்தது. தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கும் புது படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது. இப்படி முதல் படத்திலேயே மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் சஞ்சய் கைகோர்த்து இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சஞ்சய் படத்தில் நடிக்கும் பிரபலம்:
இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சஞ்சய் இயக்கம் படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மலையாளத்தில் மிகப் பிரபலமான நடிகராக இருப்பவர் துல்கர் சல்மான். இவர் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.
துல்கர் சல்மான் நடிக்கும் பபடம்:
தற்போது இவர் மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் என்ற படத்தில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் சுதா கங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ஒரு படத்திலும் துல்கர் சல்மான் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் விஜய் மகன் இயக்கும் படத்திலும் இவர் நடிக்கிறார். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.