தன் மகனை முதன் முறையாக கையில் வாங்கிய ஆல்யா, தன் தம்பியை பார்க்க ஓடி வந்த அய்லா. செம Cute வீடியோ.

0
438
alya
- Advertisement -

தனது மகனை முதன் முறையாக கையில் வாங்கிய தருணத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார் ஆல்யா மானஸா. சின்னத்திரையில் மிகப்பிரபலமான தம்பதிகளாக திகழ்பவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. ராஜா ராணி சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் ஆல்யாவும், சின்னையா கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தார்கள். அதோடு இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் சஞ்சீவ் – ஆல்யா தம்பதி.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-590-578x1024.jpg

மேலும், இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். கடந்த ஆண்டு தான் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. இவர்களுடைய குழந்தையின் பெயர் அய்லா. பின் குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் கலக்கிக் கொண்டுவந்தார்.

- Advertisement -

ஆல்யாவிற்கு பிறந்த மகன் :

அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் சமீபத்தில் தொடங்கிய கயல் சீரியலில் நடித்து வருகிறார்.இந்நிலையில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறார். இப்படி இரண்டாம் முறை கர்ப்பமாக இருந்தாலும் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால், விரைவில் ஆல்யாவிற்கு குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிவிட்டார். ஆல்யா விலகியதை தொடர்ந்து தற்போது ஆல்யா மானஸாவிற்கு பதிலாக ரியா என்பவர் புதிய சந்தியாவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்த்த தேதிக்கு முன்பாகவே பிரசவம் :

இப்படி ஒரு நிலையில் ஆல்யாவிற்கு மகன் பிறந்து இருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது இரண்டாம் குழந்தை எப்போது பிறக்கும் என்று கேள்வி கேட்டு இருந்தார். அதற்கு பதில் அளித்த ஆல்யா ‘ஏப்ரல் கடைசி அல்லது மே முதலில் குழந்தை பிறந்துவிடும்’ என்றுகூறி இருந்தார். ஆனால், எதிர்பார்த்த தேதிக்கு முன்பாவே இரண்டாம் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் ஆல்யா மானஸா.

-விளம்பரம்-

குழந்தைக்கு என்ன பெயர் :

அதே போல சமீபத்தில் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர் ஒருவர் இரண்டாம் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்போறீங்க என்று கேள்வி கேட்டக்பட்டதற்கு ‘பெண் குழந்தை பிறந்தால் லைலா, ஆண் குழந்தை என்றால் அர்ஷ்’ என்று கூறி இருந்தார். தற்போது ஆல்யாவிற்கு இரண்டாம் குழந்தை ஆண் குழந்தை பிறந்துள்ளதால் அவருக்கு ஏற்கனவே முடிவு செய்தபடி ‘அர்ஷ்’ என்று பெயர் வைத்துள்ளனர்.

This image has an empty alt attribute; its file name is 1-578.jpg

மகனை முதன் முறையாக கையில் வாங்கிய தருணம் :

ஞ்சீவ்-ஆல்யா இருவரும் ஒரு யூடியூப் பக்கம் வைத்துக்கொண்டு அதில் வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களையும் வீடியோவாக பதிவு செய்து வருகிறார்கள்.  அந்த வகையில் தனது குழந்தையை கையில் ஏந்தும் அழகிய எமோஷ்னல் வீடியோவை வெளியிட்டுள்ளனர். முதல் குழந்தை பிறந்து சில மாதத்திலேயே ஆள்யா மானஸா ‘ராஜா ராணி’ தொடரில் நடிக்க வந்துவிட்டார். எனவே, இரண்டாம் முறையும் குழந்தை பிறந்தவுடன் மீண்டும் நடிக்க வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராஜா ராணி தொடரில் இனி தான் நடிக்க வரமாட்டேன் என்று கூறிவிட்டார் ஆல்யா.

Advertisement