சமீபத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ஆல்யா மானஸா தற்போது அறுவை சிகிச்சை குறித்து பதிவிட்டுள்ளார். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று இருந்தார். அதன் பின் ராஜா ராணி சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் ஆல்யா நடித்து இருந்தார்.மேலும், இந்த சீரியலில் சின்னையா கதாபாத்திரத்தில் சஞ்சீவ் நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் இவர்கள் இருவரும் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்கள்.
சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டார் ஆல்யா.. பிறகு விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு வந்தார். அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து வருகிறார்.
இரண்டு குழந்தைக்கு பின்னும் நடித்து வந்த ஆல்யா :
இப்படி ஒரு நிலையில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார். பின் ஆல்யாவிற்கு குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிவிட்டார்.ஆல்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. இவர்கள் தனியாக தொடங்கி இருக்கும் யூடுயூப் சேனலில் அடிக்கடி வீடியோ பதிவிட்டு வருகிறார்கள். மேலும், சரிகம புரொடக்ஷன் தயாரிக்கும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் கதாநாயகியாக கமிட் ஆனார்.
ஆல்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பாப்பு இருந்த நிலையில் தான் தனக்கு அடிப்பட்டு இருப்பதாகவும் தன்னுடைய காலில் பெரிய கட்டு போட்டிருப்பதாகவும் ஆலியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோ பதிவில் நான் இதுவரையில் எதிர்பார்க்காத ஓன்று என்னுடைய வாழ்வில் நடந்து விட்டது. என்னுடைய கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை :
என்னுடைய நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் நான் நலமுடன் குணமடைய வேண்டிக்கொள்ளுங்கள் என்று மருத்துவமனையில் இருந்த படி சோகத்துடன் அந்த பதிவில் கூறியிருக்கிறார் நடிகை ஆலியா. சமீபத்தில்தான் டான்ஸ் மாஸ்டருடன் சரியான ஆட்டம் போட்ட ஆலியா தற்போது இவரின் நிலையில் பார்த்து பரிதாபப்பட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து இவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருந்தது.
அறுவை சிகைச்சைக்கு முன் பதிவு :
இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டகிராம்பதிவில் , “அறுவை சிகிச்சைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் பயமாக இருக்கிறது. ஆனால் சஞ்சீவின் மனைவியாக இருப்பதால் நான் பாக்கியசாலி. ஏனென்றால் அவர் என்னை கவனிக்க தவறியதில்லை. எனது நல்ல மற்றும் கெட்ட நேரங்கள் அனைத்திலும் உறுதுணையாக இருப்பார். என்னை ஒரு பாரமாக பார்க்கமாட்டார். அதனால் தான் என் வாழ்க்கை எப்போதும் அழகாக இருக்கிறது. எனக்கு கடவுள் கொடுத்த பரிசு சஞ்சீவ்” என பதிவிட்டுள்ளார்.