சினிமா கனவு போனதற்கு காரணமே என் அப்பா தான்- ஆல்யா மானசா வாழ்க்கையில் நடந்த சோகம்

0
615
- Advertisement -

தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவம் குறித்து முதன் முதலாக மனம் திறந்து நடிகை ஆல்யா மானசா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் மிகப்பிரபலமான தம்பதிகளாக திகழ்பவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. இவர்கள் இருவருமே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள்.

-விளம்பரம்-

இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. மேலும், இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் கலக்கி இருந்தார்.

- Advertisement -

சஞ்சீவ் – ஆல்யா நடிக்கும் சீரியல்கள்:

அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் பிரபலமாக சென்று கொண்டு இருக்கும் கயல் சீரியலில் நடித்து வருகிறார். அதற்கு பின் மீண்டும் கர்ப்பமான ஆல்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. அதோடு இவர்கள் தனியாக தொடங்கி இருக்கும் யூடுயூப் இவர்கள் வீடியோ பதிவிட்டு வருகிறார்கள். இவர்கள் பதிவிடும் வீடியோக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. பின் மீண்டும் ஆலியா அவர்கள் சன் டிவியில் சரிகம புரொடக்ஷன் தயாரிக்கும் இனியா தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சீரியல் குறித்த தகவல்:

இந்த சீரியல் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை நல்ல நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதலில் இந்த சீரியலை வேறொரு இயக்குனர் இயக்கியிருந்தார். தற்போது ஸ்டாலின் என்பவர் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் ஆல்யாவுக்கு ஜோடியாக ரிஷி நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் டிஆர்பி ரேட்டிங் டாப்பிலும் இந்த சீரியல் வந்துவிட்டது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஆல்யா மானசா பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், என்னுடைய வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டேன்.

-விளம்பரம்-

ஆல்யா மானசா பேட்டி:

நான் இதனால் என்னுடைய கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டேன். அதற்குப் பிறகுதான் சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்தேன். சில நேரங்களில் அவர்கள் சொல்லும் விஷயம் எனக்கு செட்டாகாது. சில நேரம் அவர்களே என்னை அனுப்பி விடுவார்கள். அந்த மாதிரி சமயங்களில் நான் ரொம்பவே பொருளாதார ரீதியில் கஷ்டப்பட்டேன். இதனால் நான் ஜிம் டிரைனர் ஆக வேலை பார்த்தேன், குழந்தைகளுக்கு நடனம் சொல்லிக் கொடுப்பது, குரூப்பில் நடனம் ஆடுவது போன்ற பல வேலைகளை பார்த்திருந்தேன்.

அப்பா குறித்து சொன்னது:

இன்னொரு பக்கம் நான் சினிமாவிலும் முயற்சி செய்து கொண்டிருந்தேன். அப்போது தான் எனக்கு சின்னத்திரை வாய்ப்பு வந்தது. அந்நேரம் என்னுடைய அப்பா கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். என்னுடைய அப்பாவை காப்பாற்ற என்னுடைய கனவான சினிமாவை விட்டு சீரியலுக்கு சென்று விட்டேன். ஆனால், இப்போது ஒரு விஷயத்தை நினைத்துப் பார்த்தாலும் சந்தோஷமாக இருக்கிறது. காரணம், சினிமாவில் நான் நடித்திருந்தால் தீபாவளி, பொங்கல் போது தான் மக்கள் என்னை நினைவு வைத்திருப்பார்கள். இப்போது தினமும் என்னை பார்க்கிறார்கள். இது எனக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Advertisement