வி ஐ பி படத்தின் போது தனுஷ் மற்றும் அமலா பால் அடித்த கூத்து. வைரலாகும் புகைப்படம்.

0
57050
Amala-paul

விஐபி படத்தின் போது அமலா பாலும், தனுசும் செய்த வேலைகளை ஐஸ்வரியா தனுஷ் அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். தற்போது இது குறித்து ரசிகர்கள் இணையங்களில் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ்த் திரைப் படம் “வேலையில்லா பட்டதாரி”. இந்த படத்தை எழுதி, இயக்கி படபிடிப்பு செய்தவர் வேல்ராஜ். அதுமட்டும் இல்லாமல் இவர் இயக்கிய முதல் படமும் இது தான். இந்த படத்தில் கதாநாயகனாக தனுஷும், கதாநாயகியாக அமலாபாலும் நடித்து உள்ளார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகர் தனுஷ் தான். மேலும், இது தனுஷின் 25வது படமாகும். இவர்களுடன் இந்த படத்தில் சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள்.

vip-2-amalapaul

- Advertisement -

இந்த படத்துக்கு அனிருத் ரவிச்சந்திரன் அவர்கள் இசையமைத்து உள்ளார். இந்த படம் மிகப் பெரிய அளவு ஹிட் கொடுத்து. அதோடு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படம் அந்த வருடத்திற்கான பிளாக் பஸ்டர் படம் என்று கூட சொல்லலாம். அதற்கு பிறகு வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுத்தார்கள். இந்த படத்திலும் தனுஷ், அமலாபால் அவர்கள் ஜோடியாக நடித்து உள்ளார்கள். இந்த படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் இயக்கினார். இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார். தனுஷ், அமலாபால் அவர்கள் வேலையில்லா பட்டதாரி படத்தின் முதல் பாகத்தில் காதலராக நடித்து இருந்தார்கள்.

பின் இரண்டாம் பாகத்தில் கணவன் மனைவியாக நடித்து உள்ளார்கள். மேலும், இந்த படத்தில் பாலிவுட் நடிகை கஜோல் சூப்பராக நடித்து இருந்தார். வேலையில்லா பட்டதாரி முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் இவர்கள் இருவருடைய கெமிஸ்ட்ரியும் தூள் கிளப்பியது. வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தின் போது ஒரு பாடலுக்காக அமலாபாலும், தனுஷும் சேர்ந்து பெய்ண்டில் விளையாடுவது போன்ற காட்சிகள் இருக்கும். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அமலாபால் அவர்கள் தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் அனைவரும் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-
vip-2-amalapaul

அதோடு வேலையில்லா பட்டதாரி படம் திரைக்கு வந்த போதே அமலாபாலையும், தனுஸையும் வைத்து பல்வேறு விதமாக விமர்சனம் எழுதி வந்தார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களில் சர்ச்சை நாயகியாக நடிகை அமலா பால் திகழ்கிறார். இவர் சமீபத்தில் நடித்த “ஆடை” படம் குறித்து இணையங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தன. தற்போது வேலையில்லா பட்டதாரி படம் குறித்து போட்ட புகைப்படம் மீண்டும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்துகிறது என்று கூறலாம்.

Advertisement