அண்மையில் நடிகை நதியா மற்றும் ஜெயம் ரவி இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் எம். குமரன் படத்தின் தாயும், மகனும் நீண்ட நாளுக்கு பிறகு சேர்ந்து விட்டார்கள் என்றும் கூறி வருகிறார்கள் நெட்டிசன்கள். தமிழ் சினிமா உலகில் 80, 90 கால கட்டங்களில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை நதியா. இவரின் இயற்பெயர் சரீனா அனூஷா மோய்டு ஆகும். இவர் இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான ‘பூவே பூச்சூடவா’ என்ற திரைப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானர். பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் ஒரு கலக்கு கலக்கி கொண்டு இருந்தார். அது மட்டும் இல்லாமல் 90 கால கட்டங்களில் ரசிகர்களின் கனவுக் கன்னியே நடிகை நதியா என்றும் சொல்லலாம்.
மேலும், நடிகை நதியா அவர்கள் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் எந்த பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயரை வைத்து தான் விற்பார்கள். அந்த அளவிற்கு நடிகை நதியா அவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர். உதாரணத்துக்கு நதியா வளையல், நதியா தோடு, நதியா சைக்கிள் என எல்லாத்துக்குமே நதியா பெயர் தான். பின்னர் 1988 ஆம் ஆண்டு நடிகை நதியா அவர்கள் மராட்டியரான சிரீஸ் காட்போல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில காலம் குடும்ப வாழ்க்கையிலேயே செட்டில் ஆகிவிட்டார். இவர்களுக்கு சனம், ஜனா என்ற இரண்டு பெண்கள் உள்ளனர். பின்னர் மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை நதியா அவர்கள் சினிமா உலகிற்கு ரீ-என்ட்ரி கொடுத்து உள்ளார். தற்போது அவர் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இதையும் பாருங்க : காணாமல் போனதாக கூறப்பட்ட புஸ்பவனம் குப்புசாமி மகள் வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ.
சினிமா உலகிற்கு அறிமுகமானம் ஆனதில் இருந்து தற்போது வரை இளமையுடனும், உற்சாகத்துடனும் நடித்து வருகிறார் நடிகை நதியா. 2004 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் வெளி வந்த படம் ‘எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி ‘ . இந்த படத்தில் ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், நதியா, அசின், ஜனகராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். மேலும், இந்த படத்தில் ஜெயம் ரவி, நதியா இவர்களுடைய அம்மா, மகன் பாசம் ரசிகர்களை வேற லெவல்ல கவர்ந்தது என்று சொல்லலாம். இன்று கூட இவர்களுடைய அம்மா– மகன் பாசம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொண்டு உள்ளது. தற்போது ஜெயம் ரவியும், நதியா அவர்களும் ஒரு விருது விழாவில் கலந்து கொண்டார்கள்.
அதில் நடிகை நதியா கையால் ஜெயம் ரவி விருது வாங்கி உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்தவுடன் அனைவரும் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி தாய்– மகன் உறவைப் பற்றி பரவலாக பேசி வருகின்றனர். உண்மையாகவே நதியாவின் நிஜ மகன் போல ஜெயம் ரவியின் நடிப்பு இருந்தது. மேலும், ரசிகர்கள் இவர்கள் இருவரையும் உண்மையான தாய் மகன் என்ற கண்ணோட்டத்தில் தான் பார்த்து வருகின்றனர். இவர்களுடைய புகைப்படத்தை ரசிகர்கள் லைக் செய்தும் ஷேர் செய்தும் வருகிறார்கள்.