கல்யாணம் ஆகி 4 மாசம், கற்பமாகி 8 மாசம் – கோலாகலமாக நடந்த அமலா பாலின் வளைகாப்பு.

0
431
- Advertisement -

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நிலையில் அமலா பாலின் வளைகாப்பு படு கோலாகலமாக கொண்டாடப்பட்டு இருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருந்தவர் அமலா பால். தமிழில் மதராசபட்டினம், தெய்வ திருமகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிவர் இயக்குனர் ஏ எல் விஜய். இவர் இயக்கிய ‘தெய்வ திருமகள், தலைவா’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர் அமலா பால்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும் இவரின் ஆடை படம் மிக பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது. இதனிடையே அமலா பாலுக்கும் ஏ எல் விஜய்க்கும் இடையே காதல் மலர்ந்தது. பின் 2014 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது. திருமணம் ஆகி மூன்றே ஆண்டுகளில் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்று 2017 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

- Advertisement -

அமலா பால் குறித்த தகவல்:

அதற்கு பின் இயக்குனர் விஜய், ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். அதேபோல் அமலா பால் தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். மேலும், கடந்த சில காலமாகவே அமலாபால் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற செய்திகள் கிசுகிசுக்கப்பட்டு வந்த வண்ணம் இருந்தது. அதற்கு ஏற்ப அமலா பால் பிரபல பாடகர் பவிந்தர் சிங் என்பவரை காதலித்து வருவதாக தகவல் வந்தது.

அமலா பால் இரண்டாம் திருமணம்:

அதோடு இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் எல்லாம் அடிக்கடி வைரலானது. ஆனால், இருவரும் நண்பர்கள் தான் என்று கூறினார்கள். பின் அமலா பாலின் நெருங்கிய நண்பரான ஜெகத் தேசாய் என்பவர் கடந்த ஆண்டு அவருக்கு லவ் புரோபோஸ் செய்து இருந்தார். அந்த வீடியோக்கள் எல்லாம் படு வைரலாகி இருந்தது. அதை அடுத்து அமலா பால்-ஜெகத் தேசாய் இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள்.

-விளம்பரம்-

கர்ப்பம் குறித்து அறிவித்த அமலா பால்:

இப்படி ஒரு நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார் அமலா பால். மேலும், அமலா பாலின் இந்த பதிவிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தாலும் பெரும்பாலான நெட்டிசன்கள் ‘இப்போ தான கல்யாணம் ஆச்சி அதுக்குள்ளயா’ என்று ஷாக்காக கமண்ட் போட்டு இருந்தார்கள். இதனை தொடர்ந்து கடந்த மாதம் அமலா பால் ஏழாம் மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக அறிவித்திருந்தார்.

வளைகாப்பு :

இதன் மூலம் இவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருப்பது தெரிகிறது.அதுவும் ஏழாவது மாதம் கர்ப்பமாக இருப்பதை ஒட்டி அமலா பால் பார்ட்டி வைத்து கொண்டாடிஇருந்தார். இப்படி ஒரு நிலையில் தற்போது அமலா பாலுக்கு வளைகாப்பு நடந்து இருக்கிறது. அதிலும் பாரம்பரிய முறைப்படி இந்த வளைகாப்பை நடத்தி இருக்கின்றனர். அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அமலா பால்.

Advertisement