50 விமானம்..!450 கார்..!அம்பானி மகள் திருமணத்திற்கு ஆன செலவு..!அடேங்கப்பா..!

0
1110
- Advertisement -

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், பெரும் தொழிலதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் இன்று (டிசம்பர் 12) நடைபெற்றது . 
ஆசியாவின் மிக விலை உயர்ந்த திருமணம்’ என்ற சாதனையைப் படைத்துள்ளது, அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணம். 

-விளம்பரம்-

கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் அதிகம் பேசப்பட்ட விஷயம் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மகளின் திருமணம் தான். இந்த திருமணம் குறித்த ஒவ்வொரு தகவல்களையும் தெரிந்து கொண்டு மக்கள் வாய் அடைத்து போய் உள்ளனர்.

- Advertisement -

இதற்கு முன்னதாக, 8 முதல் 10-ம் தேதி வரை ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள அரண்மனையில் திருமணச் சடங்குகள் நடைபெற்றன. இதில் உலகப் பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் எனப் பல ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் இந்த திருமணத்திற்காக ஆன செலவை அறிந்தால் உங்களுக்கு தலையை சுற்றிவிடும். அவை என்னென்ன என்பதை பாருங்கள்.

-விளம்பரம்-
  • திருமணத்திற்கு அச்சடிக்கப்பட்ட ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஆன செலவு மட்டும் ரூ.3 லட்சம் 
  • இந்த திருமணம் ரூ.722 கோடியில் நடப்பதாக கூறப்படுகிறது.இது  37 வருடத்திற்கு முன்பு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்- டயானா தம்பதியரின் திருமணம் ஆடம்பரமாக அதிக செலவில் நடந்ததற்கு இரண்டாவது அதிக செலவு.
  • இந்த திருமணத்தில் பங்கேற்க வந்த பிரபலங்களை 
    அழைத்து செல்வதற்கு மட்டும் 50 தனி விமானங்கள், 1500-க்கும் மேற்பட்ட கார்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு இருந்தன.
  • திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதி மும்பை ஒர்லி பகுதியில் ரூ.450 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பங்களா வீட்டில் குடியேறுகிறார்கள்.
  • வைரத்தால் ஜொலிக்கும் அறை, கோவில், நீச்சல் குளம், வாகன பார்க்கிங் செய்ய மட்டும் 3 தளங்கள் என மிக பிரமாண்டமாக இந்த பங்களா கட்டப்பட்டுள்ளது.
  • மேலும், விருந்தினர்களைக் கவர 108 விலைமதிப்பு மிக்க பாரம்பர்ய ஓவியங்களும் வைக்கப்பட்டிருந்தன.

Advertisement