`எப்படி இருக்கீங்க சங்கர்?’ அஜித்தின் அனுசரிப்பால் `அம்பானி’ சங்கர் நெகிழ்ந்ததன் பின்னனி இதுதான்.

0
443
ambani
- Advertisement -

அஜித்துடன் நடிகர் அம்பானி ஷங்கர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசானது. இந்த படத்தை வினோத் இயக்கி இருக்கிறார் மற்றும் போனிகபூர் தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக உள்ளார். சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள். இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார்.

-விளம்பரம்-

இதையெல்லாம் அஜித் எப்படி சமாளித்து வருகிறார்? என்பது அஜித் எப்படி கதை. இந்த படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து வருகின்றனர். தற்போது வலிமை படத்தை தொடர்ந்து இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். ‘ஏகே 61’ படத்தின் முதல்கட்ட வேலைகள் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த படத்தில் படத்தில் ஹீரோயினாக தபு கமிட் செய்திருக்கிறார்கள்.

- Advertisement -

ஏகே 61 படம் பற்றிய தகவல்:

அதுமட்டும் இல்லாமல் இந்த படம் ஐந்து மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் திட்டமிட்டிருக்கிறார்கள். மேலும், இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருக்கிறார் என்றும் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படியே இந்த படத்திற்கான பிற நடிகர்களின் தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் நடிகர் கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அம்பானி சங்கர் பற்றிய தகவல்:

அஜித்தின் இந்த படத்தையும் ஜி ஸ்டுடியோஸ் மற்றும் போனிகபூர் இணைந்து தயாரிக்க உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து அஜித்தின் ஏகே 61 படம் பற்றிய அப்டேட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் நடிகர் அம்பானி சங்கர் அஜித்துடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவர் வடிவேலுவின் காமெடி டிவியில் ஒருவராக அறியப்பட்டவர். கருப்பசாமி குத்தகைக்காரர் படத்தில் சிறு பையனாக நடித்தவர் சங்கர். அதன்பிறகு கருணாஸின் அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் சங்கர் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

நடிகர் அம்பானி சங்கர் செய்யும் வேலை:

பின் கடந்த பல வருடங்களாக சினிமாவில் வடிவேலு நடிக்காமல் இருந்ததால் அவரது காமெடி டீமில் உள்ள பலரும் வாய்பிளந்து இருந்தனர். அப்போது தன்னுடைய ரூட்டை மாற்றி விதவிதமான காமெடி கான்செப்ட்களை `Thirsty crow’ என்ற பெயரில் யூடியூப்பில் பதிவிட்டு வந்தார். இவருக்கு லைக்ஸ்க்குகளை அள்ளிக் குவித்து வருகின்றனர். மேலும், சங்கரது டீம் உருவாக்கிய குறும்படம் ஒன்று நைஜீரியா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் இவர் அஜித் சாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டு கூறியிருப்பது,

நடிகர் அம்பானி சங்கர் பதிவிட்ட பதிவு:

இந்த புகைபடம் வெளியானதும் நான் அவரோட படத்தில் நடிக்கிறேன் என நினைத்து வாழ்த்துக்கள் குவிய ஆரம்பித்து விட்டது. அஜித் சார் படத்தில் நான் நடிக்கவில்லை. அஜித் சாரோட ஜி படத்தில் நான் நடித்து இருந்தேன். அதன் பின் கிட்டத்தட்ட 18 வருடத்திற்கு பிறகு அவரை சந்திக்க வாய்ப்பு அமைந்தது. இந்த புகைப்படம் சென்னையில் ஒரு ஸ்டார் ஹோட்டலில் தான் எடுத்தேன். சார் வீட்டின் பங்க்ஷன் அங்கே நடந்தது. நான் வேறு ஒரு பங்ஷனுக்கு அந்த ஓட்டலுக்கு போயிருந்தேன். அப்போது தான் சாரை சந்தித்தேன். என்னை பார்த்ததும் எப்படி இருக்கீங்க சங்கர்? என்று அஜித் சார் நலம் விசாரித்தார். அதே அன்போடு சார் என்னிடம் பேசியது எனக்கு சந்தோசமாக இருந்தது என்று கூறியிருக்கிறார்.

Advertisement