எமி ஜாக்சனின் புதிய லுக், ஹாலிவுட் நடிகருடன் ஒப்பிட்டு குவிந்த கேலிகள் – எமி ஜாக்சன் கொடுத்த பதிலடி.

0
1627
Amyjackson
- Advertisement -

சமீபத்தில் நடிகை எமி ஜாக்சனின் புகைப்படம் ஒன்று பெரும் பேசும் பொருளாக மாறியது. இது குறித்து அவர் விளக்கமும் அளித்தும் ட்ரால் செய்பவர்களையும் கேள்வி எழுப்பியுள்ளார். ஹாலிவுட் சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிஹாலிவுட் சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிவிற்கு புயலாய் வந்தவர் ஹாலிவுட் மாடலும் நடிகையுமான எமி ஜாக்சன். தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான ‘மதராசப்பட்டிணம்’படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஹாலிவுட் மாடல் அழகியான நடிகை ஏமி ஜாக்சன்.

-விளம்பரம்-

அதன் பின்னர் ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இவரது நடிப்பில் கடைசியாக 2.0 பிரம்மாண்ட படம் வெளியாகி பெரும் வெற்றியடைந்தது.தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். ஹாலிவுட்டில் பிரபலமான சூப்பர் கேர்ள் இணைய தொடரிலும் ஏமி நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவருக்கும் ஜார்ஜ் பனயோட்டு என்ற தொழிலதிபருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

- Advertisement -

விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள் என்றும் செய்திகள் பரவியது. ஆனால், அம்மணி அதற்க்கு முன்பாக கர்ப்பமாகிவிட்டார். இந்த நிலையில் நடிகை எமி ஜாக்சன், சமீபத்தில் எடுத்தக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படம் விமர்சனத்துக்குளாகியது. இது குறித்து அவர் தற்போது விளக்கம் ஒன்றும் அளித்துள்ளார். அந்த புகைப்படம் அடுத்த திரைப்படதற்க்கானஅவ்வாறு மாறியுள்ளார் என்றும் பலர் கூறி வந்தனர்.

எமி ஜாக்சன் கூறியது:

“நான் ஒரு நடிகை, நான் என் வேலையை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன். கடந்த ஒரு மாதமாக, இங்கிலாந்தில் ஒரு புதிய ப்ராஜெக்ட் படப்பிடிப்பில் இருந்தேன். அதனால், நான் நடிக்கும் கேரக்டருக்காக, உடல் எடையை குறைத்து, அந்த பாத்திரத்தில் என்னை முழுமையாக ஈடுபடுத்த வேண்டியிருந்தது. இந்தியர்களின் ஆன்லைன் புலம்பல்கள் மிகவும் வருத்தமளிக்கிறது(முக்கியமாக ஆண்கள்).

-விளம்பரம்-

ஒரு படத்திற்காக தங்கள் தோற்றத்தை கடுமையாக மாற்ற வேண்டிய சக ஆண் நடிகர்களுடன் நான் பணியாற்றியிருக்கிறேன், அதற்காக அவர்கள் மிகவும் பாராட்டப்பட்டனர். ஒரு பெண் அசாதாரணமான முடி மற்றும் ஒப்பனை மூலம் அதைச் செய்யும் தருணத்தில், அழகைப் பற்றிய அவர்களின் இலட்சியத்திற்கு இணங்கவில்லை, அவர்கள் உங்களை ட்ரோல் செய்ய உரிமை உண்டு என்று நினைக்கிறார்கள்.

Advertisement