தெலுங்குல கூட நாளைக்கு என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? சேரி சொல்லுக்கு பிரெஞ்சு மொழி அர்த்தம் சொன்ன குஷ்பூவை விளாசிய காயத்ரி.

0
250
Gayathri
- Advertisement -

தற்போது சோசியல் மீடியா முழுவதும் மன்சூர் அலிகான் குறித்த சர்ச்சை தான் ட்ரெண்டிங் ஆகி கொண்டு இருக்கிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மன்சூர் அலிகான், இப்போதெல்லாம் படத்தில் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை. படத்தில் நானும் திரிஷாவும் இருக்கிறோம். லியோவில் அவரை கட்டிலில் தூக்கி போடலாம். அப்படி ஒரு காட்சி இருக்கும் என்றெல்லாம் நினைத்தேன். குஷ்பு, ரோஜாவை எல்லாம் அப்படி செய்துள்ளேன். ஆனால், இங்கே அப்படி காட்சி இல்லை.

-விளம்பரம்-

எனக்கு வில்லன் ரோல் கொடுப்பது இல்லாது. இப்போதெல்லாம் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை என்று கூறி இருந்தார். மன்சூர் அலிகானின் இந்த பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், தேசிய மகளிர் ஆணையமானது நடிகர் மன்சூர் அலிகான் மீது தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. பின் நடிகர் சங்கம், திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

- Advertisement -

குஷ்பூ பதிவு:

இதனை அடுத்து மன்சூர் அலிகான் சர்ச்சை குறித்து நெட்டிசன் ஒருவர் குஷ்பூ கொடுத்த பதில், திமுக குண்டர்கள் இப்படியான மோசமான மொழியைத் தான் பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது இது தான். சாரி, என்னால் உங்களைப் போல சேரி மொழியில் பேச முடியாது. ஆனால், என்ன நடந்தது, என்ன பேசினார்கள், என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கண் விழித்துப் பாருங்கள்.

சர்ச்சையான சேரி என்ற சொல் :

மேலும் திமுக உங்களுக்கு சட்டங்களை கற்றுத்தரவில்லை என்றால், நீங்கள் ஒரு வழக்கறிஞராக இருப்பது வெட்கக்கேடானது என்று பதிவிட்டிருந்தார்.தற்போது குஷ்பூவின் பதிவில் ‘சேரி மொழி’ என்று பயன்படுத்தியது குறித்து தான் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், தனது சொல்லாடலை நியாயப்படுத்தும் விதமாக தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு எக்ஸ் தளத்தில் விளக்கமளித்துள்ளார் குஷ்பூ.

-விளம்பரம்-

அதில் ‘பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக தாம் எப்போதும் முன்னணியில் நிற்பேன் என்றும், பிரெஞ்சு மொழியில் சேரி என்ற சொல்லுக்கு அன்பு என்பதே பொருள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அன்பு என்ற அர்த்தத்திலேயே சேரி என்ற சொல்லை தாம் பயன்படுத்தியதாகவும் குஷ்பு விளக்கமளித்துள்ளார்.

குஷ்பூவின் இந்த விளக்கத்தை கேட்ட பலர் குஷ்பூவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகையும் முன்னாள் பா.ஜ.க உறுப்பினருமான காயத்ரி ரகுராம், குஷ்பூவின் இந்த் பதிவிற்கு தனது கண்டனத்தை தெரிவித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘அதில், “தெலுங்கு மொழியில் ‘ரேப்’ என்றால் நாளை என்று அர்த்தம், அதனால் மன்சூர் அலி கான் பயன்படுத்திய வார்த்தைக்கு நாளை என்று அர்த்தமா?

இப்படித்தான் கீழ்த்தனமாக உங்கள் தவறுகளில் இருந்து தப்பிக்க நினைப்பீர்களா? தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுவிட்டு அதில் இருந்து கடந்து செல்லுங்கள், இல்லையென்றால் பிறர் செய்யும் தவறுகளை தட்டிக்கேட்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? உலகத்துக்கே தெரியும் நீங்கள் அந்த வார்த்தையை எந்த அர்த்தத்தில் பயன்படுத்தினீர்கள் என்று புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்துகொள்ளதீரகள்” என்று தனது கணடனத்தை பதிவிட்டிருந்தார்.

Advertisement