வெற்றிமாறன் தயாரிப்பில், ஆண்ட்ரியா நடித்து OTTயில் வெளியாகி இருக்கும் ‘அனல் மேலே பனித்துளி’ – முழு விமர்சனம் இதோ.

0
631
andrea
- Advertisement -

இயக்குனர் ஆர் கெய்சர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் அனல் மேல் பனித்துளி. இந்த படத்தை வெற்றிமாறன் தயாரித்திருக்கிறார். படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஆதவ் கண்ணதாசன், அழகம் பெருமாள், இளவரசு, அனுபாமா குமார், லவ்லின் சந்திரசேகர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் சந்தோஷ நாராயணன் இசையமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். பாலியல் வன்கொடுமையும், சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது. ஆன்ட்ரியா சோலோ ஹீரோயினாக நடித்திருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஆன்ட்ரியா அவர்கள் ஸ்போர்ட்ஸ் ஷோரூமில் வேலை செய்கிறார். இவர் ஆதவ் கண்ணதாசனை
காதலிக்கிறார். பின் இவர்களுடைய திருமண ஏற்பாடு நடக்கிறது. இந்த சூழ்நிலையில் ஆண்ட்ரியா உடன் பணிபுரியும் பெண்ணின் திருமணத்திற்காக கொடைக்கானல் ஆன்ட்ரியா செல்கிறார். திருமணம் முடிந்த பிறகு ஆன்ட்ரியா ஊர் சுற்றி பார்க்க செல்கிறார். அப்போது மூன்று பேரால் ஆண்ட்ரியா கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகிறார்.

- Advertisement -

மேலும், தனக்கு நேர்ந்த கொடுமைக்கு காரணமான குற்றவாளிகளை சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனை வாங்கி தர வேண்டும் என்று ஆன்ட்ரியா காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். இறுதியில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனரா? அவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டதா? இதனால் ஆன்ட்ரியா சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தின் முழுவதையுமே ஆண்ட்ரியா தாங்கி சென்றிருக்கிறார்.

படத்தின் கதை:

இவருடைய நடிப்பு படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. இவரை அடுத்து துணையாக நிற்கும் ஆதவ் கண்ணதாசனுடைய கதாபாத்திரம் பாராட்டுக்குரிய வகையில் இருக்கிறது. மேலும், இந்த படத்தை சரியாக கொண்டு செல்ல இயக்குனர் கையாண்டிருக்கும் விதம் பாராட்டுகளை பெற்றிருக்கிறது. பல பெண்களுக்கு விழிப்புணர்வையும், தைரியத்தையும் கொடுக்கும் வகையில் இந்த படத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பாலியல் வன்புணர்வுக்கு பாதிக்கப்படும் பெண்களுக்கு குடும்பத்தினர் ஆதரவு முக்கியம் என்பதை ஆழமாகவும், தெளிவாகவும் இயக்குனர் சொல்லி இருக்கிறார்.

-விளம்பரம்-

பொதுவாகவே மானம், குடும்ப கவுரவம் என்று பேசி பெண்கள் இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வார்கள். இதை எல்லாம் தவிர்க்க இயக்குனர் கையாண்ட விதம் அருமையான ஒன்று. அதுமட்டுமில்லாமல் இந்த மாதிரி தவறு செய்த குற்றவாளியை கொலை செய்யாமல் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று இயக்குனர் புது முயற்சியை கையாண்டிருக்கிறார். படத்தின் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் பக்க பலமாக இருக்கிறது.

படம் குறித்த தகவல்:

குறை என்று பார்த்தால் ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள். ஒரு அழுத்தமான கதையை இயல்பாக மக்கள் பார்வைக்கு புரியும் வகையில் எளிதாக இன்னும் சொல்லியிருக்கலாம். சில வசனங்கள் எல்லாம் உணர்வு ரீதியாக மிஸ் ஆகிறது. கிளைமாக்ஸ் காட்சியை இன்னும் அழகாக இயற்கை தனமாக காண்பித்திருக்கலாம். அதோடு இரண்டாம் பாதியில் ஆண்ட்ரியா ரொம்ப அதிகமாக வசனம் பேசிக் கொண்டே இருந்தது மாதிரி இருக்கிறது. ரொம்ப சீரியசான விஷயத்தை கொஞ்சம் சுவாரசியத்துடன் இயக்குனர் கொடுத்திருக்கிறார்.

நிறை:

ஆண்ட்ரியாவின் நடிப்பு சிறப்பு

கதைக்களம் அருமை

பின்னணி இசையும், ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் படம் அமைந்திருக்கிறது.

குறை:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்.

கிளைமாக்ஸ் காட்சியில் தெளிவாக இயற்கை தனமாக சொல்லி இருக்கலாம்.

நிறைய இடங்களில் ஆண்ட்ரியா அதிகமாக வசனம் பேசுவது போன்று இருக்கிறது.

அழகான கதையை இன்னும் எளிமையாக சொல்லி இருக்கலாம்.

மொத்தத்தில் அனல் மேல் பனித்துளி – பெண்களுக்கான படைப்பு

Advertisement