டிவி ஷோவில் தான் அணியும் ஆடை குறித்து விமர்சனம் – சாமி பட நடிகருக்கு பிரபல Vj கொடுத்த பதிலடி.

0
1250
- Advertisement -

நடிகை அனசுயா பரத்வாஜின் ஆடை குறித்து மூத்த நடிகர் கோட்டா சீனிவாசராவ் கூறிய கருத்து சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தற்போது அனசுயா பதிலடி கொடுத்துள்ளார். தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான மூத்த நடிகராக திகழ்பவர் கோட்டா சீனிவாசராவ். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் தான் மிரட்டி இருக்கிறார். சமீபத்தில் இவர் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் இவரிடம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

Anasuya Bharadwaj hot low waist saree caps from Jabardasth –  indiancelebblog.com

அதற்கு கோட்ட சீனிவாசராவ் அவர்கள் தற்போதைய காமெடி நிகழ்ச்சிகள் எல்லாம் சர்க்கஸ் போல தான் இருக்கு. பார்வையாளர்களை சிரிக்க வைக்க பயங்கர கஷ்ட பட வேண்டியதாக இருக்கிறது. பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும் நடிகையுமான அனசுசியா பரத்வாஜ் திறமையான நடிகை. இருந்தாலும் அவர் உடை அணியும் விதம் தான் எனக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். இப்படி கோட்டா சீனிவாசராவ் கூறிய கருத்து சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீயை விட வேகமாக பரவியது. பலரும் இவருடைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கோட்டா சீனிவாசராவ் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை அனசுயா டீவ்ட் போட்டுள்ளார்.

- Advertisement -

அதில் அவர் கூறியிருப்பது, மூத்த கலைஞர் ஒருவர் என்னை பற்றி கூறிய சில கருத்துக்களை இப்போது தான் நான் பார்த்தேன். நான் எப்படி ஆடை அணிய வேண்டும் என்று அவர் கவலைப்பட்ட விஷயம் எனக்கு ஆச்சரியத்தை தருகிறது. சினிமா உலகில் அதிக அனுபவம் வாய்ந்த ஒருவர் இவ்வளவு கீழ் தரமான முறையில் கருத்து தெரிவிப்பது வருத்தமளிக்கிறது. ஆடை என்பது முழுக்க முழுக்க ஒருவரின் தனிப்பட்ட விஷயம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

அது ஒரு தொழில்முறை தேர்வாகவும் இருக்கலாம். ஆனாலும் தனிப்பட்ட விஷயம் தான். இன்றைய சமூகங்கள் இத்தகைய பயனற்ற விஷயத்தை எப்படி முதன்மையானதாக மாற்றுகிறது என்பது முரணாக உள்ளது. அந்த மூத்த நடிகர் திரையுலகில் மது அருந்துவதையும், மோசமான ஆடைகளை அணிவதையும் அல்லது பெண்களை தவறாக நடத்துவதையும் அவமானப்படுத்துவதையும் அவர்கள் புகழ்வார்கலா? என்னை போன்ற ஒரு திருமணமான பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் தாய் இன்னும் வேலை செய்கிறார்.

-விளம்பரம்-

திருமணமாகி, குழந்தைகள் பெற்று, நடிகைகளுடன் திரையில் காதல் செய்வது, சட்டை இல்லாத தனது உடம்பை காட்டும் இந்த நட்சத்திரங்கள் அனைவரையுமே ஏன் யாரும் கேள்வி கேட்பதில்லை? எப்போதுமே பெண்களை மட்டும் தான் தாக்குகிறீர்கள் என்று அனசுயா கேள்வி எழுப்பி உள்ளார். இப்படி இவர் பதிவிட்ட டீவ்ட் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement