ஷூட்டிங் ஸ்பாட்டில் Back Flip செய்து ப்ரோபோஸ் செய்த விஜய் டிவி சீரியல் ஹீரோ. வீடியோ இதோ.

0
45253
krishna
- Advertisement -

சீரியல் நடிகர் ஒருவர் செய்த ஸ்டாண்ட் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அக்டோபர் 18 ஆம் தேதி ஒளிபரப்பான தொடர் தான் அன்பேசிவம். விவாகரத்து பெற்ற பெற்றோரை குழந்தைகளின் அன்பு எப்படி சேர்த்து வைக்கிறது என்ற கதை களத்தை கொண்டது தான் அன்பே சிவம் சீரியல். இந்த சீரியலில் கதாநாயகியாக அன்பு செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ரக்ஷா ஹாலா நடிக்கிறார். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், சீரியலில் நல்ல சிவம் என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் ஸ்ரீ நடிக்கிறார்.

-விளம்பரம்-

இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான சிவா மனசுல சக்தி மற்றும் காற்றின் மொழி ஆகிய சீரியல்களில் லீட் ரோலில் நடித்திருந்தார். அன்பே சிவம் கதையை பொறுத்தவரை நல்லசிவம் ஒரு நேர்மையான வழக்கறிஞராக இருக்கிறார். அன்பு செல்வி பேஷன் டிசைனராக இருக்கிறார். திருமணம் செய்து கொள்ளும் இவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் தங்களுக்கு இடையே ஏற்படும் முரண்பாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிகிறார்கள். இவர்களுக்கு ஓவியா, இனியா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

- Advertisement -

ஓவியா அன்புச் செல்வியிடமும், இனியா நல்ல சிவத்திடமும் வளர்கின்றனர். தாய் மற்றும் தந்தை சந்திக்கும் போது பெற்றோரிடம் மீண்டும் புரிதல் ஏற்பட்டு இணைகிறார்களா? குழந்தைகளுக்காக தங்களுடைய ஈகோவை மாற்றிக் கொள்கிறார்களா? என்பது சீரியலின் கதை. இந்நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் விக்ரம் அவர்களுடைய ஸ்டண்ட் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவரா! இப்படி எல்லாம் செய்துள்ளார் என்று வியந்து போய் பாராட்டி வருகிறார்கள்.

மேலும், இந்த வீடியோவை ஏராளமானோர் லைக் செய்தும், ஷேர் செய்தும் வருகிறார்கள். மேலும், விக்ரம்ஸ்ரீ அவர்கள் திறமையான நடிகர் மட்டுமில்லாமல் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் உடையவர். சமீபத்தில் இவர் ஜிம்னாஸ்டிக் கற்றுக்கொண்டார். தனது ஜிம்னாஸ்டிக் பயிற்சியின் போது எடுத்த வீடியோக்களை நிறைய சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியது, எனக்கு ஸ்டண்ட் வேலை செய்வது ரொம்ப பிடிக்கும். அதை நான் ரசித்து தான் செய்கிறேன். இது மிகவும் நன்றாக உள்ளது என்றும் அவர் சமீபத்தில் கூறியிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement