அவங்க ரெண்டு பேருக்கும் கொரோனாவோடு ஷூட்டிங் நடந்தது – புலம்பிய டெக்னிஷியன். வெளியான ஷாக்கிங் ஆடியோ இதோ.

0
1714
anbe
- Advertisement -

கொரோனா பிரச்சனை காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எல்லாம் ரத்தாகி இருந்தது. இருப்பினும் இடையில் சினிமாவின் போஸ்ட ப்ரொடக்சன் பணிகள் மட்டும் அனுமதிப்பட்டிருந்த நிலையில் சின்னத்திரை தொடர்களை பல கட்டுப்பாடுகளுடன் 60 பேர் மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சின்னத்திரை ஷூட்டிங் அனைத்தும் துவங்கப்பட்டது.சினிமா ஷூட்டிங் இல்லாததால் தற்போது ரிலீஸ் ஆக இருந்த படங்கள் அனைத்தும் OTTயில் வருகிறது.

-விளம்பரம்-

அதே போல கடந்த மே 10 ஆம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சீரியல் படபிடிப்புகள் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.ஆனால், தற்போது சீரியல் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டுள்ளது. இது ஒரு புறம் பல்வேறு சீரியல்களில் கொரோனா தொற்றோடு சில நடிகர் நடிகைகள் நடித்தது தான் கொடுமை. இப்படி ஒரு நிலையில் பிரபலமான சீரியலில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ‘பூ’ பெயர் கொண்ட சீரியலின் ஹீரோக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

இதையும் பாருங்க : புதுப்பேட்டை அசுரன் பட நடிகர் கொரோனாவால் மரணம் – செல்வராகவன் போட்ட வித்யாசமான இரங்கல் பதிவு.

- Advertisement -

ஆனாலும், அவரை ஷூட்டிங்கில் தொடர்ந்து கலந்து கொள்ளச்சொல்லி வற்புறுத்தியிருக்கிறார்கள்.இதனால் அந்த சீரியலில் பணிபுரிந்த 30 பேருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டிருக்கிறது. இப்படி ஒரு நிலையில் ரோஜா சீரியல் நடிகை ரம்யாவின் அம்மா கொரோனா தொற்றால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமானார். முதலில் ரம்யாவிற்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்ட நிலையில் பின்னர் அவரது அம்மாவிற்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

இப்படி ஒரு நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அன்பான’ சீரியலில் ஹீரோ ஹீரோயின் இருவருக்கும் கொரோனா இருந்தும் படப்பிடிப்புகள் நடந்ததாக டெக்னிஷன் ஒருவர் புலம்பிய ஆடியோ ஆதாரம் தற்போது வைரலாகி வருகிறது. அதில் கூறியுள்ள அவர் அந்த ஹீரோ கர்நாடகாவை சேர்ந்தவர் என்றும் ஹீரோயின் கேரளாவை சேர்நதவர் என்றும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

இதை வைத்து பார்க்கும் போது அது அன்பே வா சீரியல் தான் என்பது உறுதியாகியுள்ளது. அதற்கு ஏற்றார் போல தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சீரியலில் நாயகியாக நடித்து வரும் டெல்னா டேவிஸ் கடந்த ஏப்ரல் 12ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாதாக கூறி இருந்தார். ஆனால் உடனே தனிமைப்படுத்திக் கொள்ள தற்போது குணமாகிவிட்டதாகவும்.ஆனால் என்ன சோகம் என்றால் அவரது குடும்பத்தார் தற்போது நோயினால் பாதிக்கப்பட்டுள்தாக கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement