தொகுப்பாளினி நிஷா என்னவானார்..!அவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா..!

0
524

பிரபல `இசையருவி’ தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வந்தவர் நிஷா. இவருடைய குரலைக் கேட்பதற்கென தனி ரசிகர் பட்டாளமே காத்திருக்கும். இசையருவியில் வேறொரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த முரளியைக் காதலித்துக் கரம் பிடித்தார்.

திருமணத்துக்குப் பிறகு ஃபோரஸ் (Forus) என்கிற பெயரில் பொட்டீக் நடத்தி வந்தவர்.தற்போது சன் டி.வி சீரியல் ஒன்று மூலமாக ரீ-என்ட்ரி ஆகவிருக்கிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நிஷா தனது மகளை பற்றி பேசியுள்ளார்.

பொட்டிக் ஒரு பக்கம் நல்லபடியா போய்ட்டு இருக்கு. எங்க பொண்ணு ஜீஶ்ரீ இப்போ யூகேஜி படிக்கிறாங்க. ரொம்பப் பொறுப்பான குழந்தை. சீரியல் வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. சரி பாப்பாதான் வளர்ந்துட்டாங்களே ரீ-என்ட்ரி கொடுக்கலாமேன்னு தோணுச்சு. சீக்கிரமே என் ரசிகர்களைச் சந்திக்க வர்றேன்.

அன்பான கணவர், கூடவே என் பொண்ணைத் தங்கமாத் தாங்குற எங்கப்பா அம்மா, என் பொண்ணு. இவங்கதான் என் பலமே. என் குழந்தை ரொம்பப் பொறுப்பானவங்கனு சொன்னேன் இல்லியா… நான் வெளிய போறேன்னா என் பொண்ணுகிட்ட `அம்மா ஷூட்டிங் போய்ட்டு சீக்கிரமே வர்றேன்.. நீ அம்மம்மாவைப் பார்த்துக்கோன்னு’ அவளைப் பெரிய மனுஷியாக்கிட்டுக் கிளம்பிப் போவேன் அந்த அளவிற்கு பொறுப்பான மகள் அவள்.

என் குழந்தைக்கு பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்தோம். ஜேன்னா உலகம் .. நியூமராலஜியில ஜீன்னு வைக்கணும்னு சொன்னாங்க. ஶ்ரீன்னா லட்சுமி .. `உலக லட்சுமி ‘ங்கிறதுதான் அவங்க பேருக்கான அர்த்தம். ஆனா நான் என் பொண்ணை `கும்முட்டி’ன்னு தான் கூப்பிடுவேன். வேற ஒண்ணுமில்ல… பொண்ணு கொழுகொழுனு பொறக்கணும்னு ஆசை. அதனால அவ வயித்துல இருக்கிறப்பவே கும்முட்டினு கூப்பிட ஆரம்பிச்சுட்டேன்