ஆண்கள் அணியும் வேஷ்டி சட்டை அனிந்து வந்த தொகுப்பாளினி பிரியங்கா..? புகைப்படம் உள்ளே.!

0
1584
priyanka-vj

விஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அதில் பிரபல தொகுப்பாளினி டிடிக்கு பிறகு அதிக ரசிகர்கள் கொண்ட ஒரு நபர் யார் என்றால் அது பிரியங்கா தான். சமீபத்தில் இவர் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்திருந்த ஸ்டைல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

vj-priyanka
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகியாக இருந்து வருகிறார். கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் இவர் நடுவராக பங்கு பெற்று வருகிறார். இவரது பிரபலமே இவரின் சிரிப்பு தான், இவரின் சிரிப்புக்கு பல ரசிகர்களும் உள்ளனர்.

தற்போது விஜய் டிவியில் குழந்தைகள் பங்கு பெற்று வரும் “சூப்பர் சிங்கர்” என்ற பாடல் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்கு பெற்று வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஜூங்கா ‘ படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தொகுப்பாளினி பிரியங்கா கலந்து கொண்டிருந்தார்.

பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் ஸ்டைலாக ஆடை அணிந்து செல்லும் ப்ரியங்கா, இந்த நிகழ்ச்சிக்கு படு மாஸாக வேட்டி சட்டையில் வந்திருந்தார். அவர் அணிந்து வந்திருந்த ஆடையை பார்க்கும் போது ‘காலா’ படத்தில் இருக்கும் ரஜினியின் கெட்டப்பை போன்று தான் இருந்தது. இதனால் இவர் காலா ஸ்டைலுக்கு மாறிவிட்டாரா என்று ரசிகர்கள் எண்ணி வருகின்றனர்.