தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக இருந்து வரும் விஜய், தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வரும் பெயரிடபடாத படத்தில் நடித்து வருகிறார். விஜய் 62 என்று அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் பாதி படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வருகிறது.
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் விஜய் 3 வது முறையாக இணையும் இந்த படம் விஜய்க்காக எழுதப்பட்ட கதை இல்லயாம். ஆம், இந்த படத்தில் முதன் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து தான் எடுக்க திட்டம் தீட்டினாராம் முருகதாஸ். இந்த படத்தின் கதையை முதன் முதலில் ரஜினியிடம் தான் கூறினாராம்.
மேலும் , ரஜினி இந்த கதையை கேட்டு விட்டு இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம். பின்னர் ஒரு சில காரணங்கலால் இந்த படத்தில் அவர் நடிக்க முடியாமல் போயுள்ளது. அதன் பின்னர் ரஜினிக்காக உருவாக்கிய இந்த கதையில் நடிகர் விஜய்யை நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளார் முருகதாஸ்.
இந்த படம் ஒரு அரசியல் சம்பந்தபட்ட படம் என்று ஏற்கனவே வெளியான சில தகவல்களில் இருந்து தெளிவாக தெரிகிறது. சமீப காலமாக ரஜினி அரசியலில் ஈடுபட்டு வருவதால் தான், இப்படத்தை ரஜினியை வைத்து எடுக்கலாம் என்று முருகதாஸ் முடிவெடுத்திருப்பாரோ என்று ஒரு சின்ன எண்ணமும் தோன்றுகிறது. எது எப்படியோ, ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் நடித்திருக்கிறார் என்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.