தன்னை நயன்தாராவுடன் ஒப்பிட்டு வந்த memeகள் – குட்டி நயன் அனிகா சொன்ன பதில். இதோ வீடியோ.

0
784
anika
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கதா இடத்தை பிடித்து விடுகிறார்கள். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான். அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் மகத்தான வெற்றி கொடுத்த என்னைஅறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் தல அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து அனிகா விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக நடித்திருந்தார். இந்த படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்த அனிகா தற்போது நயன் போலவே மாறி வருகிறார். விஸ்வாசம் படத்திற்கு பின்னர் பலரும் இவரை குட்டி நயன்தாரா என்று தான் கூறி செல்லமாக அழைத்து வருகின்றனர்.

- Advertisement -

குட்டி நயன் பட்டம் குறித்து விளக்கம் :

அதே போல சமீப காலமாக அனிகா நடத்தி வரும் போட்டோ ஷூட்கல் கூட நயன்தாராவை இமிடேட் செய்வது போலவே இருக்கிறது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தன்னை நயன்தாராவுடன் ஒப்பிடுவது குறித்து கேட்கப்பட்ட போது பதில் அளித்த அனிகா ‘என்னிடமே நிறைய பேர் அப்படி சொல்லி இருக்கிறார்கள் மேலும் சமூக வலைதளத்தில் கூட என்னை அப்படி அழைப்பதை நான் பார்த்திருக்கிறேன் ஆனால் எனக்கு எப்படி என்று தெரியவில்லை என்று சிரித்த அனிகா என்னை பொறுத்தவரை நான் அப்படி நினைத்தது கிடையாது ஆனால் சமூக வலைதளத்தில் என்னை நயன்தாராவுடன் ஒப்பிட்டு பல கமெண்ட்களை பார்த்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

புட்ட பொம்ம :

இந்நிலையில் அனிகா தற்போது பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் முதன் முதலாக கதாநாயகியாக நடித்துள்ள படம் புட்ட பொம்மா. இப்படம் மலையாளத்தில் கடந்த 2020ஆம் ஆண்டுவெளியான கப்பேலா என்ற படத்தின் ரீமேக்காகும். இந்நிலையில் புட்ட பொம்ம படம் கடந்த 4ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அனிகா சுரேந்தர் பிரபலமாகியிருக்கிறார்.

-விளம்பரம்-

ஓ மை டார்லிங் படம் :

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் படம் ஓ மை டார்லிங் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த ட்ரைலரில் வரும் லிப் லாக் காட்சியில் நடித்திருக்கிறார் அனிகா. இதனை பார்த்த ரசிகர்கள் அனிகா மலையாளத்தில் முதல் படத்திலேயே நயன்தாராவை மிஞ்சி விடுவார்கள் போலிருக்கிறது என்றும், ட்ரைலரிலேயே இப்படி என்றால் படத்தில் எப்படியோ என விமர்சித்து வருகின்றனர்.

அனிகா சுரேந்தர் விளக்கம் :

இதுகுறித்து விளக்கமளித்த அனிகா `நான் நடித்துள்ள “ஓ மை டார்லிங்” படத்தில் வரும் முத்தக்காட்சியை தவிர்க்க முடியாது. என்னிடம் கதை சொல்லும் போதே அதில் வரும் முத்த கட்சியின் முக்கியத்துவத்தை என்னிடம் கூறினார் இயக்குனர். கதைக்கு அந்த காட்சி தேவை பட்டதால் நான் நடித்தேன். அந்த காட்சியில் ஆபாசம் என்பதர்க்கு இடம் கிடையாது, அது படம் வெளியான உடன் உங்களுக்கே தெரியும் என்று கூறினார். இருந்தாலும் முதல் படத்திலேயே இப்படி பட்ட காட்சியில் நடிப்பதா? என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement