‘அயலி’ தமிழ்ச்செல்வி யார் தெரியுமா? நிஜ வாழ்க்கையில் இத்தனை போராட்டங்களா ?

0
1862
ayali
- Advertisement -

உலகத்தை கொரோன தாக்கியதில் இருந்து சமீப காலமாக அதிக ஓடிடி தொடர்கள் வந்த வன்னமாறு இருக்கிறது. அவற்றில் பல மாபெரும் வெற்றியும் பெற்றுருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில், குஷிமாவதி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இணைய தொடர் தான் அயலி. இத்தொடரில் அபிநயஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்திலும், அருவி மதன், அன்மோல், லிங்கா, சிங்கம்புலி, காயத்ரி, தர மெலோடி, பிரகஹீஸ்வரன், TSR சரினிவாசமூர்த்தி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

-விளம்பரம்-

ஊர் கட்டுப்பாடு :

கதையில் வரும் ஊரில் ஒரு காவல் தெளிவாம் இருக்கிறது. அந்த ஊரின் பெண் ஒருவர் பக்கத்துக்கு ஊர் ஆணோடு காதலித்து திருமணம் செய்து ஊரை விட்டு சென்று விடுவார். இவர்கள் செல்லும் அதே நேரத்திலத்தில் பல விதமான பிரச்சைனகள் ஏற்படுகின்றன. இதற்கு அந்த பெண் ஊரை விட்டு சென்றதுதான் காரணம் என அயலி தெய்வத்தின் ஒரு பிடி மண்ணை எடுத்து வேறு ஊரில் கோவில் வைத்து பூஜை செய்து வருகின்றனர். மேலும் வயதிற்கு வராத பெண்கள் இந்த கோவிலில் வந்து சத்தியம் செய்து கொடுக்க வேண்டும் என்றும், வயதிற்கு வந்த ஒரு ஆண்டிற்குள் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று ஊர் கட்டுப்பாடு இருக்கிறது.

- Advertisement -

டாக்ட்டராக நினைக்கும் பெண் :

இதனால் பெண்கள் வயதிற்கு வந்தபின் திருமணம் செய்து வைக்க வேண்டும் இல்லையென்றால் சாமிக்குதாம் வந்துவிடும் என நம்பும் வீரப்பண்ணை ஊரில் எந்த பெண்ணாலும் 9ஆம் வகுப்பிற்கு மேலே படிக்க முடியவில்லை, அந்த சூழ்நிலையில் 8ஆம் வகுப்பு படித்து வருபவர் தான் அபிநயஸ்ரீ, இவர் இந்த ஊரில் கட்டுப்பாடுகளை எவ்வாறு தண்டி படிக்கிறார் என்பதை தத்ரூபமாக இந்த படத்தில் கூறியுயுள்ளார். மேலும் இப்படத்தின் நாயகியான அபிநயஸ்ரீ மிகச்சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார்.

சொந்தங்களின் தொல்லை :

அயலி பட நடிகை அபியின் சொந்த ஊர் மதுரை அருகே உள்ள ராஜபாளையம். 2005அம ஆண்டு பிறந்த இவர் மூக்குத்தி அம்மன், நவராசா போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தான் இடப்படத்தில் நடித்த அபிநயஸ்ரீ பேட்டி இந்த பேட்டியில் அவர் கூறுகையில் திரைப்படத்தில் நடிப்பதற்கு அவருடைய தாய் தந்தை போன்றவர்கள் ஆதரவு கொடுத்தாலும் உறவினர்கள் ஆதரவு கொடுக்காமல் தொந்தரவு செய்து இருக்கின்றனர். ஆனாலும் இதைத் தாண்டி சினிமாவில் நடித்து வருவதாக கூறினார். இப்படத்தில் அபிநயஸ்ரீ எந்த அலங்காரங்களும் இல்லாமல் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

தந்தையின் ஆதரவு :

இவரின் தந்தை ஏற்கனவே இயக்குனர் எஸ் கே சந்திரசேகரின் படங்களில் பணியாற்றி இருப்பதாகவும் ஆனால் தற்போது தன்னுடைய தாத்தாவின் வேலையை பார்த்து தன்னுடைய தந்தை பிசியாக இருப்பதினால் அவர் சினிமாவில் வேலை செய்யவில்லை என்றாலும் தான் சினிமாவில் நடிப்பதற்கு உறுதுணையாக இருக்கிறாராம். மேலும் அபி கூறுகையில் இந்த படத்தில் என்னுடன் உடைத்த னைவரும் ஒரு குடும்பம் போல இருந்தனர். நான் பல இடங்களில் திணறும்போதெல்லாம் எனக்கு உறுதுணையாக இருந்து உதவி செய்தனர்.

உண்மையாகவே அழுத நிகழ்வு :

அதே போல இடப்பதில் கடைசியாக வரும் தாலிகட்டும் காட்சியில் தான் பயந்ததாகவும் ஆனால் அந்த காட்சி இவ்வளவு பேசப்படும் என்று தெரிந்த பிறகு மிகவும் தைரியமாக நடித்தேன் என்று கூறினார். அயலி படத்தில் அபிநயஸ்ரீ அழுகும் காட்சிகள் மிகவும் அதிகமாகவே இருக்கும், அந்த வகையில் சில காட்சிகளில் வசனங்களை பேசிய பின்னர் உண்மையாகவே அழுது விட்டாராம். அதே போல இறுதி எபிசோடில் தான் தூக்கத்தில் இருக்கும்போது எழுப்பி இயக்குனர் ஒரு முறை கூறியதும் அந்த காட்சியில் தன்னுடைய கவனத்தை செலுத்தி நடித்து கொடுத்ததாக கூறினார் அயலி படத்தின் கதாநாயகி அபிநயஸ்ரீ.

Advertisement