‘ஆம்பள புள்ள வேனும்னு வேண்டி பெத்த புள்ள’ – தவறான ஊசியால் இறந்த மகன் குறித்து கலங்கிய அனிதா குப்புசாமி

0
596
- Advertisement -

ருத்துவர்களால் தன் மகன் இறந்தது குறித்து முதன்முறையாக அனிதா குப்புசாமி கண்ணீர் விட்டு கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய நாட்டுப்புற பாடகர் மற்றும் திரைப்பட பின்னணிப் பாடகராக வலம் வருபவர்கள் புஷ்பவனம் குப்புசாமி- அனிதா. இருவரும் தன்னுடைய நாட்டுப்புற இசையின் மூலம் ஒட்டு மொத்த நாட்டுப்புற மக்களின் மனதையும் கவர்ந்தவர்கள். அதுமட்டும் இல்லாமல் புஸ்பவனம் குப்புசாமி தன் இசை திறமைக்காக தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்று இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்ற போது இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு போட்டிகளிலும், கச்சேரிகளிலும் ஒன்றாக பாடினர்கள். அப்போது தான் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் குப்புசாமி – அனிதா தம்பதியினர் சினிமா, மேடை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகள் என பல இடங்களில் பாடியுள்ளனர். அதோடு இவர்கள் இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் நிறைய இசை கச்சேரிகளை நடத்தி இருக்கிறார்கள்

- Advertisement -

புஷ்பவனம் குப்புசாமி – அனிதா பற்றிய தகவல்:

மேலும், இவர்கள் இருவரும் தங்கள் பாடல்கள் வழியாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருக்கின்றனர்.. அதுமட்டுமில்லாமல் இவர்கள் கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக தையல் இயந்திரங்களையும் வழங்கி இருக்கிறார்கள். சமீபத்தில் தான் அனிதா அவர்கள் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்று தொடங்கி இருக்கிறார். அதில் அவர் மாடித்தோட்டம், பூஜை அறை, சமையல் குறிப்புகள் என பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

புஷ்பவனம் குப்புசாமி – அனிதா மகள் திருமணம்:

இதனால் இவரை சோசியல் மீடியாவில் எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். மேலும், இவர்களுக்கு பல்லவி, மேகா என்ற இரண்டு மகள்கள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதில் மூத்த மகளின் பெயர் பல்லவி. இவர் பல் மருத்துவராக பணி புரிகிறார். இரண்டாவது மகள் மேகா. கடந்த ஆண்டு தான் பல்லவிக்கும் , ஐடி நிபுணரான கௌதம் ராஜேந்திர பிரசாத்துக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

அனிதா அளித்த பேட்டி:

இந்நிலையில் தன்னுடைய மகன் இறந்தது குறித்து அனிதா குப்புசாமி அளித்திருக்கும் அதிர்ச்சி தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. குப்புசாமி- அனிதா இருவருக்கும் இரண்டு மகள்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இவர்களின் மகன் குறித்து யாருக்கும் தெரியாது. சமீபத்தில் அனிதா குப்புசாமி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், எனக்கு முதலில் பல்லவி என்ற பெண் குழந்தை பிறந்திருந்தார். இரண்டாவது ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று நான் கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தேன்.

தன் மகன் குறித்து அனிதா சொன்னது:

அதேபோல எனக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தை நல்ல அழகு, நல்ல கலர். சிசேரியன் மூலமாக தான் அந்த குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த 24 மணி நேரத்துக்குள்ளேயே இறந்து விட்டது. காரணம், மருத்துவர்கள் போட்ட தவறான ஊசியினால் என்னுடைய குழந்தை நெஞ்செல்லாம் எரிந்து விட்டது என்று அழுதவாறு கூறியிருக்கிறார். இதை அறிந்த ரசிகர்களும், அனிதா குப்புசாமியின் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய சோகம் நடந்திருக்கிறதா! என்று ஆறுதல் கூறி வருகின்றனர்.

Advertisement