-விளம்பரம்-
Home விமர்சனம்

‘பரோலில் வெளியில் வரும் கைதியின் கதை’ – எப்படி இருக்கிறது ‘சைரன்’ – முழு விமர்சனம் இதோ.

0
720

தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்த ஜெயம் ரவி சமீப காலமாக தோல்விப்படங்களை கொடுத்து வருகிறார். இறுதியாக ஜெயம் ரவி நாயகனாக நடித்த பூமி, அகிலன், இறைவன் ஆகிய மூன்று படங்களும் பெரும் தோல்வியை சந்தித்தது. இப்படி ஒரு நிலையில் தற்போது இவர் நடித்துள்ள ‘சைரன்’ படம் இன்று வெளியாகியிருக்கிறது. அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இவரை தொடர்ந்து படத்தில் அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு, சமுத்திரக்கனி, வீரம் யுவானா,அழகம் பெருமாள்,அஜய் என்று பலர் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி எஸ் பின்னணி இசை கொடுக்க ஜி வி பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

கதைக்களம் :

தான் செய்யாத தவறுக்கு 14 ஆண்டுகள் சிறையில் இருக்கும் நாயகன் 14 நாட்கள் கரோலில் வெளியில் வந்து தன்னுடைய இந்த நிலைமைக்கு காரணமானவர்களை எப்படி பழி வாங்குகிறார் என்பதை இந்த படத்தின் ஒன் லைன். படத்தின் நாயகன் ஜெயம் ரவி (திலகன்) ஒரு ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்து வருகிறார். தனது மனைவி மற்றும் மகளுடன் வாழ்ந்து வரும் ஜெயம் ரவி தான் செய்யாத தவறுக்காக 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கிறார்.

பின்னர் பரோலில் 14 நாட்கள் பரோலில் வெளியில் வரும் ஜெயம் ரவியால் அவரது குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால், பள்ளி செல்லும் வயதில் இருக்கும் அவரது மகள் மட்டும் அவரது வருகையை எண்ணி கோபப்படுகிறார். அதற்கு காரணம் தன்னுடைய தந்தை சிறைக்கு சென்றதால் பள்ளியில் அவர் கேலிகளையும் அவமானங்களையும் எதிர்கொண்டது தான். சிறையில் இருந்து பரோலில் வெயில் வந்த ஜெயம் ரவி தன்னுடைய குடும்பத்தைக் காணத்தான் வெளியில் வந்திருக்கிறார் என்று பலரும் நினைக்கிறார்கள்.

-விளம்பரம்-

ஆனால் தன்னை இந்த நிலைக்கு ஆளாகிய அவர்களை பழிவாங்கவே ஜெயம் ரவி வெளியில் வருகிறார். அவரை கண்காணிக்கும் ஒரு போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவியுடனே பயணிக்கிறார் யோகி பாபு. ஆனா,ல் ஜெயம் ரவி பழிவாங்கத்தான் வெளியில் வந்திருக்கிறார் என்பதை உறுதியாக நம்பும் போலீஸ் அதிகாரியான கீர்த்தி சுரேஷ். அவரை தொடர்ந்து கண்காணித்து, அவர் ஏதாவது தவறு செய்தால் கையும் களமாக பிடிக்க காத்துக் கொண்டிருக்கிறார். இறுதியில் ஜெயம் ரவியின் இந்த நிலைக்கு யார் காரணம்? கீர்த்தி சுரேஷ்ஷை மீறி தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய நபர்களை ஜெயம் ரவி பழி வாங்கினாரா? இல்லையா? என்பதை படத்தின் மீதிக் கதை.

-விளம்பரம்-

நிறை :

படத்தில் ஒரு நடுத்தர நபராக ஜெயம் ரவி தனது கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருகிறார்.

ஆரம்பத்தில் 10 நிமிடம் கதை மெதுவாக துவங்கினாலும் அதன் பின்னர் திரைக்கதை சூடு பிடிக்கிறது.

போலீஸ் அதிகரிக்கான உடல் இல்லை என்றாலும் தனது நடிப்பால் அதை நியாயப்படுத்தி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

இரண்டாம் பாதியில் ஜெயம் ரவி பழி வாங்கத்தான் போகிறார் என்று எண்ணம் தொன்றிலானும் அதை கிளைமாக்ஸ் வரை சுவாரசியமாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர்.

அதிலும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிக்கு முன் வரும் ஒரு ட்விஸ்ட் அருமை.

ஜெயம் ரவி மட்டுமல்லாது போலீஸ் அதிகாரியாக வரும் சமுத்திரகனி, ஜெயம் ரவி தங்கையாக வரும் சாந்தினியின் கதாபத்திரங்களும் படத்திற்கு பலம்.

யோகி பாபு அங்கும் இங்கும் சிரிக்க வைக்கிறார்.

குறை :

ஜெயம் ரவி மற்றும் அனுபமாவின் ஜோடி சுத்தமாக செட் ஆகவில்லை

கீர்த்தி சுரேஷின் நடிப்பு ஆங்காங்கே கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகி செயற்கையான தளபதி விஜய் மேனரிசம் போல தெரிகிறது.

படத்தில் மூன்று வில்லன்கள் இருந்தாலும் அது படத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

சாம் சி எஸ்சின் பின்னணி இசை சில நேரங்களில் காதுக்குள் ரிங் சத்தத்தை கொடுத்திருக்கிறது.

ஜி,வி பிரகாஷ் இசையில் ஒலிக்கும் பாடல்கள் படத்திற்கு ஒரு ஸ்பீட் பிரேக்கர்ஸ் தான்.

இறுதி அலசல் :

அழுத்தமான வசனங்களாலும், சமீபகாலமாக தமிழ் சினிமா தொடாத கதையை நேர்த்தியாக கையாள முயற்சி செய்துள்ளார் இயக்குனர். தனி ஒருவன் படத்திற்கு பின்னர் அடங்கமறு, கோமாளி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்து வந்த ஜெயம் ரவி, பின்னர் நடித்த பூமி, அகிலன், இறைவன் போன்று தொடர்ந்து தோல்விப்படங்களை கொண்டதார். தொடர் தோல்விப்படங்களை தொடர்ந்து இந்த சைரன் படம் ஜெயம் ரவி திரைப்பயனத்திற்கு நல்ல வழியை ஏற்படுத்தி இருக்கிறது. குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய ஒரு ஆவெரேஜ் ஆக்ஷன், செண்டிமெண்ட் படம் தான் இந்த சைரன்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news