அபுதாபியில் கட்டப்பட்டு இருக்கும் சுவாமி நாராயணன் கோயில் குறித்து நடிகர் சரத்குமார் கூறியிருக்கும் கருத்து தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. துபாய்- அபுதாபியில் ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில் சுவாமி நாராயணன் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோவில் சுமார் 700 கோடி செலவில் கட்டப்பட்டு இருக்கிறது. பி ஏ பி எஸ் அமைப்பு சார்பில் பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக இந்த கோவிலை கட்டியிருக்கிறார்கள்.
இளஞ்சிவப்பு ராஜஸ்தான் மணல் கற்கள் மற்றும் வெள்ளை இத்தாலிய மார்பில் கற்கள் இந்தக் கோவில் உருவாக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த கோவில் கட்ட கடந்த 2015 ஆம் ஆண்டு அபுதாபியின் பட்டத்து இளவரசு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தனக்கு சொந்தமான 27 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த கோயில் உடைய திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
அபுதாபி கோவில் திறப்பு விழா:
மேலும், இந்த கோயிலை பிரதமர் மோடி தான் திறந்து வைத்திருக்கிறார். அதன் பின் அங்கு நடைபெற்ற அனைத்து பூஜைகளிலுமே பிரதமர் மோடி கலந்து கொண்டிருந்தார். இந்த விழாவில் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலருமே கலந்து கொண்டிருந்தார்கள். அந்த வகையில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் இந்த விழாவில் கலந்து கொண்டிருந்தார். பின் இவர் செய்தியாளர்களை சந்தித்து, இது மிகச்சிறந்த அனுபவம்.
கோவில் குறித்து சொன்னது:
இந்த கோவில் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்துக்கு சான்றாக இருக்கிறது. இதை சாத்தியமாக்கிய ஐக்கிய அரபு அமீரக அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது நம் கலாச்சாரத்தின் அற்புதமான சான்று. இது அனைத்து மதத்தினருக்குமான ஒரு கோவில். அது இந்த கோயில் உடைய கட்டுமானத்திலேயே தெரிகிறது. பயணிகளுக்கும், இந்தியர்களுக்கும் இது ஒரு மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக இருக்கும் என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
சரத்குமார் குறித்த தகவல்:
தென்னிந்திய சினிமா திரை உலகில் 90 காலகட்டங்களில் முன்னனி நடிகராக திகழ்ந்தவர் சரத்குமார். தற்போது இவர் அரசியல்வாதியாகவும் சிறந்து விளங்கி வருகிறார். சரத்குமார் அவர்கள் நடிகர், அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடி பில்டர் என பன் முகங்களை கொண்டவர். இவர் இதுவரை 140க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
சரத்குமார் திரைப்பயணம்:
அது மட்டும் இல்லாமல் இவர் முன்னால் தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் ஆவார். கடந்த ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் சரத்குமார் பழுவேட்டையர் ரோலில் நடித்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை அடுத்து பல படங்களில் சரத்குமார் பிசியாக நடித்து வருகிறார்.