மலையாளத்தில் நடிகர் நிவின் பாலி நடித்த பிரேமம் படம் தமிழ் தெலுங்கு ஹெய்ந்தி என பல மொழி ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த படத்தில் மலர் டீச்சருக்குபின்னர் நம் அனைவரயும் கவர்ந்தது நடிகை அனுபமா தான். அந்த படத்தில் பள்ளி பருவ பெண்ணாக வளம் வந்த இந்த கேரளத்து பைங்கிளிக்கு தற்போது காதல் வந்துவிட்டது என்று கிசு கிசுக்க படுகிறது.
பிரேமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதில் நடித்த 3 கதாநாயகிகளுக்குமே சினிமாவில் ஒரு நல்ல அந்தஸ்து கிடைத்து விட்டது. மேலும் அந்த படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த அனுபமாவும் அதன் பின்னர் தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தில் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதையும் பாருங்க : உன்னை நம்பமாட்டேன்.! அபி மீது பாய்ந்த வனிதா.! லீக்கான இன்றைய கிளிப்பிங்.!
தமிழில் கொடி படத்திற்கு பின்னர் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தற்போது தெலுங்கில் இவர் ஏகப்பட்ட பிஸியாக நடித்து வருகிறார்.சமீபத்தில் இவர் பிரபல கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் கூட காதலில் விழுந்ததாக கிசுகிசுக்கபட்டது.
ஆனால், அந்த செய்தியை முற்றிலும் மறுத்தார் அனுபமா பரமேஸ்வரன். இந்த நிலையில் அனுபமா ஈரமான உடையில் அட்டை படத்திற்காக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.