நல்லவேளை நான் இந்த ஜென்ரேஷன் பொறக்கல – பிரபல பாடகி அனுராதா சொன்ன காரணம்.

0
509
Anuradha
- Advertisement -

நல்ல வேளை நான் இப்போது பிறக்கவில்லை என்று மன வேதனையில் பாடகி அனுராதா ஸ்ரீராம் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய அளவில் மிக பிரபலமான பாடகியாக திகழ்பவர் அனுராதா ஸ்ரீராம். இவர் தன்னுடைய 6 வயதிலேயே இசைப் பயிற்சியை தொடங்கினார். பின் கச்சேரிகள், இசை நிகழ்ச்சிகள் என்று அனைத்திலும் அனுராதா பங்கு பெற்றிருந்தார்.

-விளம்பரம்-

பின் ஏ. ஆர். ரகுமான் தான் பம்பாய் திரைப்படத்தில் இடம்பெற்ற மலரோடு மலரிங்கு என்ற பாடலை குரூப் பாடகராக பாடி சினிமாவிற்கு அறிமுகமானார் அனுராதா. அதன் பின்னர் இவர் மின்சார கனவு படத்தில் இடம்பெற்ற அன்பென்ற மழையிலே என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். அதன் பின்னர் இவர் பல படங்களில் பின்னணி பாடல்களை பாடி இருக்கிறார். இவருடைய குரலுக்கு மயங்காத உயிர்களே இல்லை என்று சொல்லலாம்.

- Advertisement -

90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை இவருடைய பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. மனதை மயக்கும் அனைவரையும் வசீகரிக்கும் குரலுக்கு சொந்தக்காரியாக அனுராதா திகழ்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, சிங்களம், கன்னடம், மலையாளம், வங்காளம் போன்ற பழமொழிகளில் பாடியிருக்கிறார். கிட்டத்தட்ட 13 மொழிகளில் 5000க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடி இருக்கிறார்.

அனுராதா திரைப்பயணம்:

அது மட்டும் இல்லாமல் இவர் பல ரியல் ஷோக்கலில் நடுவராகவும் கலந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அனுராதா தன்னுடைய கணவருடன் சேர்ந்து பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, நான் ஒவ்வொரு முறையும் ரியாலிட்டி ஷோவில் வரும் பசங்களை காப்பாற்றுங்கள் என்று கடவுளிடம் வேண்டுவேன்.

-விளம்பரம்-

அனுராதா அளித்த பேட்டி:

இப்ப இருக்குற சூழ்நிலையில் பல குழந்தைகள் வாய்ப்புக்காக போராடுவது பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது. அவர்கள் பேஷனோட இருக்கிற வேலை எல்லாம் விட்டுட்டு பாடகராக வேண்டுமென்ற ஆசையில் வருகிறார்கள். எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது இல்லையே! எல்லோரும் நம்ம பசங்க மாதிரி தானே இருக்கும். எல்லோருக்கும் வாய்ப்பு வரணும் என்று ஆசைப்படுவார்கள். எப்படி நீ நினைத்து வருத்தப்பட்டா முடியாது என்று என் கணவர் கூட சொல்லுவார்.

திறமை குறித்து சொன்னது:

அதனால எல்லோரிடமும் தனியாக சொல்லுவேன். இதை கத்துக்கோ, அதை கத்துக்கோ தனியாக தெரியணும் என்று சொல்லுவேன். ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை இருந்தால் தான் இந்த உலகத்தில் சிறந்ததாக இருக்க முடியும். ஏதாவது ஒரு தனித்தன்மை வேண்டும் என்று தான் நான் ஆசைப்படுகிறேன். அப்போது நான் என்ன அறியாமலேயே நினைப்பேன், நல்ல வேளை நம்ம அப்பொழுது பிறந்து விட்டோம். இந்த நேரத்தில் நாம் இருந்திருந்தால் ரொம்பவே சர்வே பண்ணுவதற்கு கஷ்டம் என்று நினைத்தேன். அந்த காலத்தில் எங்களுக்கு ஒரு ஸ்கோப் இருந்தது.

வாய்ப்பு குறித்து சொன்னது:

ஒரு வாய்ப்பு கிடைத்தால் அடுத்தடுத்து எங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், இப்போ அப்படி இல்லை. அதற்கு ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருக்கிறது. தேவா கூட ஒருமுறை சொல்லி இருக்கிறார். எனக்கு பட்டம் கொடுக்கிறதுக்கு பதிலாக வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். அந்த மாதிரி தான் நமக்கு பட்டம் எதுவும் தேவையில்லை வாய்ப்பு வேண்டும். அது இப்போ ரொம்பவே கஷ்டம். அதை நானும் நிறைய முறையில் ஃபில் பண்ணி இருக்கிறேன் என்று கூறினார். இப்படி அவர் பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement