பா ரஞ்சித் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – கொந்தளித்த பௌத்த அமைப்பு. காரணம் இதான்.

0
267
Paranjith
- Advertisement -

இயக்குனர் பா ரஞ்சித் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கணும் என்று தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை கண்டனம் தெரிவித்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்கிறார் பா. ரஞ்சித். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து வட சென்னையை கதைக்களமாக கொண்டு மெட்ராஸ் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி இருந்தார். இவ்விரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சார்பட்டா பரம்பரை படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்றது. தற்போது இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி உள்ளார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது.

- Advertisement -

பௌத்த மதத்தை அவமதித்த ரஞ்சித்:

இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். தற்போது இவர் நடிகர் விக்ரமை வைத்து படம் இயக்குகிறார். அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் பா ரஞ்சித் இயக்கிய படத்தில் காட்சிகள் இருப்பதாக கூறி தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை கண்டனம் தெரிவித்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தம்மம் படம்:

தற்போது இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய படம் தம்மம். இந்த படத்தில் புத்தரின் தலை மீது ஒரு குழந்தை ஏறி நின்று கொண்டு புத்தர் ஒரு கடவுள் அல்ல, அவர் மனிதர் தானே என்பது போல வசனம் வருகிறது. இதை கண்டித்து தான் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை கண்டனம் தெரிவித்து இருக்கிறது. அதில் அவர்கள், புத்தர் கடவுள் இல்லை என்று சொல்வதற்காக அவரது தலை மீது ஏறி நின்று சொல்லும் இந்த கேவலமான சேலை இதுவரை எந்த படத்திலும் பார்த்திருக்க முடியாது.

-விளம்பரம்-

காட்சிகளை நீக்க கோரிக்கை:

மேலும், புத்த மதம் உள்ள நாடுகளில் இதுபோன்ற காட்சி வெளியே வந்தால் அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் உடனடியாக கைது செய்து சிறையில் அடைப்பார்கள். ஆனால், இந்தியாவில் தமிழகத்தில் சிறுபான்மையினர் புத்த மதத்தினை பின்பற்றுகின்றனர். அதிலும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பும் அங்கீகாரமும் இல்லாத காரணத்தினால் தான் இது போன்ற கொடுமை செயல் நடக்கிறது. இயக்குனர் ரஞ்சித் படத்தில் வெளியாகி இருக்கும் இந்த காட்சியினால் தமிழகத்தில் பௌத்தர்கள் மனம் பாதிக்கப்படுவர்கள்.

ரஞ்சித் பகிரங்க மன்னிப்பு கேட்க காரணம்:

அதுமட்டுமில்லாமல் இந்த காட்சி உலகநாடுகளுக்கு சென்றால் உலகிலுள்ள பௌத்தர்களின் எதிர்ப்பையும், கண்டனத்தையும் பா ரஞ்சித் எதிர் கொள்ள வேண்டியதாக இருக்கும். ஆகவே, படத்தில் உள்ள அந்த காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். அந்தக் காட்சிகளுக்காக ரஞ்சித் வருத்தத்தையும், மன்னிப்பையும் பொதுவெளியில் சொல்ல வேண்டும். அது மட்டுமில்லாமல் எந்த மதத்தினரும் புண்படும் படியான இதுபோன்ற காட்சிகள் ஊடகங்களில் வரக்கூடாது என்பதற்கான நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும். இந்த காட்சியை இணையதளங்களில் அனைவரும் நீக்க வேண்டும். இதை யாரும் பகிர கூடாது. இந்த கோரிக்கையை ஏற்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள்.

Advertisement