எனக்கு அரிய வகை நோய் இருக்கிறது,ஷூட்டிங்கூட நின்றுவிடும் – அனுஷ்கா கொடுத்த ஷாக்.

0
633
- Advertisement -

நடிகை அனுஷ்கா தனக்கு அரியவகை நோய் இருப்பதாக கூறியது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தெலுங்கு திரையுலகில் 2005-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘சூப்பர்’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக நாகர்ஜுனா நடித்திருந்தார். இப்படத்தில் நடிகைகள் ஆயிஷா டகியா மற்றும் அனுஷ்கா ஷெட்டி என டபுள் ஹீரோயின்ஸ் நடித்திருந்தனர். இது தான் நடிகை அனுஷ்கா ஷெட்டி அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படமாம் இதனைத் தொடர்ந்து சுமனின் ‘மகா நந்தி’, ரவி தேஜாவின் ‘விக்ரமார்குடு’, விஷ்ணு மஞ்சுவின் ‘அஷ்ட்ரம்’ என அடுத்தடுத்து சில தெலுங்கு படங்களில் நடித்தார் அனுஷ்கா ஷெட்டி.

-விளம்பரம்-

அதன் பிறகு தெலுங்கு திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை அனுஷ்கா ஷெட்டி, அடுத்ததாக தமிழ் திரையுலகில் நுழையலாம் என முடிவெடுத்தார். தமிழில் 2006-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘இரண்டு’. இது தான் நடிகை அனுஷ்கா ஷெட்டி தமிழ் திரையுலகில் என்ட்ரியான முதல் திரைப்படமாம். இந்த படத்தினை பிரபல இயக்குநர் சுந்தர்.சி இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக மாதவன் நடித்திருந்தார்.

- Advertisement -

அனுஷ்காவின் திரைப்பயணம் :

‘இரண்டு’ படத்துக்கு பிறகு ‘வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத் திருமகள், தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், லிங்கா, என்னை அறிந்தால், பாகுபலி’ போன்ற வெற்றி படங்களில் நடித்தார் அனுஷ்கா ஷெட்டி.இப்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை அனுஷ்கா ஷெட்டி. அனுஷ்கா ஷெட்டிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த நிலையில் தான் இவர் கடந்த 2018ஆம் ஆண்டு “பாகமதி” படத்திற்கு பிறகு பெரிதாக படங்கள் எதுவும் நடிக்கவில்லை.

பிரச்னைகளை வெளிப்படுத்தும் நடிகைகள் :

இந்த நிலையில் சமீப காலமாக சினிமா நடிகைகள் தங்களுக்கு உள்ள நோய் குறித்தும், பிரச்னைகள் குறித்தும் வெளிப்படையாக கூறி வருகின்றனர். குறிப்பாக நடிகை சமந்தாவுக்கு மயோசிட்டிஸ் என்ற நோயும், ஸ்ருதிஹாசனுக்கு பி.சி.ஓ.எஸ் என்ற நோய் இருப்பதாய் அவர்களே வெளிப்படையாக கூறியிருந்தனர். இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை அனுஷ்கா சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டி ஒன்றில் தனக்குள்ள நோய் குறித்து கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

-விளம்பரம்-

அனுஷ்கவிற்கு இருக்கும் அறிய நோய் :

அவர் கூறுகையில் ” எனக்கு சிரிப்பு வியாதி இருக்கிறது, இதென்னடா மனிதன் சிரிப்பது ஒரு பிரச்சனையா என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் இது வேறு மாதிரியான சிரிப்பு. நான் சிரிக்க தொடங்கினால் தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரையில் சிரித்துக்கொண்டே இருப்பேன். சினிமாவில் காமெடி காட்சிகள் வந்தால் நான் சிரித்துக்கொண்டே இருப்பேன். நான் நினைத்தால் கூட என் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாது.

படப்பிடிப்பு நிறுத்தி விடுவார்கள் :

படப்பிடிப்பின் போது நான் சிரிக்க ஆரம்பித்தால் அந்த படப்பிடிப்பை நிறுத்தும் அளவிற்கு என்னுடைய சிரிப்பு தொடர்ந்து 20 நிமிடங்கள் இருக்கும். இந்த இடைவெளியில் படக்குழுவினர் சென்று ஸ்நாக்ஸ், டிபன் போன்றவற்றை சாப்பிட்டு விட்டு வரலாம் என்று தெரிவித்துள்ளார். இப்படிபட்ட ஒரு நோய் அனுஷ்க்காவிற்கு இருப்பதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தங்களுக்கு இருக்கும் நோய்களை கூறிவரும் ஸ்ருதிஹாசன், சமந்தாம், பூனம் கவுர் போன்ற நடிகைகள் பட்டியலில் தற்போது நடிகை அனுஷ்காவும் சேர்த்துள்ளார்.

Advertisement