இந்த அவமானத்தால் தான் அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்தேன்.! பல நாள் ரகசியத்தை உடைத்த கமல்

0
4648
Apoorva-Sagodharargal
- Advertisement -

உலக நாயகன் கமலஹாசன், தமிழ் திரை உலகை தாண்டி இந்தி சினிமாவிலும் தனது கால் தடத்தை பதித்தவர். 1989 ஆம் ஆண்டு இவர் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படம் தமிழ், தெலுகு, இந்தி என பல்வேறு மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தை எடுத்ததற்கான காரணத்தை கமல் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

kamal haasan

- Advertisement -

இந்த படத்தில் அப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்த கமலின் குள்ளமான உருவத்தின் ரகசியம் இன்று வரை ஒரு மிக பெரிய ஆச்சர்யமாக தான் உள்ளது. ஆனால், நடிகர் கமல், அப்பு கதாபாத்திரத்தில் நடித்ததற்கு முக்கிய காரணமே அவரின் உண்மையான உயரத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனம் தான் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இது பற்றி பேசியுள்ள கமல் ‘நான் இந்தி சினிமாவில் நடித்து வந்த போது, என்னிடம் சிலர் நீங்கள் அமிதா பச்சனை போன்று உயரமாக இருந்திருக்க வேண்டும். இல்லையெனில் இன்னும் கொஞ்சம் உயரமாக இருந்திருந்தால் பாலிவுட்டில் நீங்கள் தான் சூப்பர் ஸ்டார் என்று கூறினார்கள்.

-விளம்பரம்-

Appu-Raja

அவர்கள் அப்படி சொன்னது என்னை மிகவும் பாதித்தது. அப்போது தான் எனக்கு திறமை இருக்க உயரம் ஒரு தடையா என்று எனக்குள் ஒரு எண்ணம் தோன்றியது. அதனால் தான் என்னுடைய உயரத்தை குறைத்து அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் நடித்தேன். அப்படி உருவானது தான் அந்த படம்’ என்று தெரிவித்துளளார்.

Advertisement