பிக் பாஸ் வீட்டில் யாஷிகாவிற்கு புதிய பட்ட பெயர் என்ன தெரியுமா..! காரணம் இதோ

0
848
yashika-anand

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இளைஞர்களின் அபிமான பெண் போட்டியாளர் யார் என்றால் அது யாஷிகா ஆனந்த் தான். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு பின்னர் இவருக்கு தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

yashika6

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள பெண் போட்டியாளர்கள் மத்தியில் இவர் தான் கடைக்குட்டி, அதனால் இந்த நிகழ்ச்சியின் போக்கை பற்றி கவலைப்படாமல் சற்று அலட்சியமாகவே பிக் பாஸ் வீட்டில் சுற்றி திருந்து வருகிறார். இதனால் இவருக்கு சக போட்டியாளர்கள் மத்தியில் கொஞ்சம் டென்ஷனும் கிளம்பி விடுகிறது.

ஆனால், இவர் எப்போதும் டேனியலுடன் மட்டும் கொஞ்சம் சகஜமாக பழகி வருகிறார். டேனியலும் ஒரு ஜாலியான பேர்வழி தான், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களுடன் சகஜமாக பழகி வருகிறார். இந்நிலையில் நடிகர் டேனி, யாஷிகாவிற்கு ஒரு புது பட்டபெயரை வைத்துள்ளார்.

பிக் பாஸ் போட்டியாளர்களை நடிகர் கமல் அகம் டிவி வழியாக வாரா வாரம் சந்தித்து பேசுவது வழக்கம். அதுபோல நேற்று போட்டியாளர்கள் கமலிடம் பேசிக்கொண்டிருந்த போது , எந்தெந்த போட்டியாளர்களுக்கு என்னென்னா பட்டப்பெயர் வைக்கப்பட்டுள்ளது என்று பேசிவந்தார்.

yashika anand

அதில் பாலாஜி, அவரது மனைவியை நாட்டாமை என்ற பட்டப்பெயரை வைத்தார். அதன் பின்னர் டேனி, நடிகை யாசிக்காவிற்கு தலைவலி மாத்திரை என்ற பட்டப்பெயரை வைத்தார். இதற்கு காரணத்தை கூறிய டேனி , யாசிக்க எப்போதும் மற்ற போட்டியாளருக்கு எதாவது தலைவலி கொடுத்துக்கொண்டே இருப்பார் என்று கூறியுள்ளார்.

பிக் பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தால் “Bigg Boss Vote Tamil” என்ற இணைய பக்கத்திற்கு சென்று உங்களது வாக்குகளை செலுத்தி உங்களின் விருப்பமான போட்டியாளரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றலாம்.

Advertisement