தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு அண்ணா, கலைஞர் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் – அப்பாவு.

0
630
- Advertisement -

நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஜெயன் ஆன்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு நடைபெற்றது. இதில் இந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும்  தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர்  அப்பாவு கலந்து கொண்டார். அதில் இருவரும் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அதில் கூறிய சட்டசபை  சபாநாயகர் கூறுகையில் இந்தியாவில் முன்பு ஒரு காலத்தில் சனாதன தர்மத்தால் 7% மக்கள் மட்டுமே கல்வியை கற்று வந்தனர். அந்த சமூக மக்கள் மட்டுமே நிலங்களை வாங்க முடியும்  வந்தது. அந்த நிலங்களை வாங்க வேண்டும் என்றால் சனாதான தர்மத்தில் பிறந்திருக்க வேண்டும்.

-விளம்பரம்-

இந்தியாவில் 8% சதவீதம் மக்களுக்கு மட்டுமே கல்வி நிலம் ஆகியவை சொந்தமாக இருந்தது. வேறு யாரும் கல்வி கற்க முடியாது நிலங்களை முடியாது என்ற நிலையில் இருந்து வந்தது. இந்த சட்டத்தை 1795 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாட்டினர் மாற்றி அமைத்தனர். பாஜகவினர் வேண்டுமானால் சனாதான தர்மம் தான் இந்த நாட்டை செமையாக்குவது என்று கூறலாம். கள்ளக்குறிச்சியில் இப்போது கூட ஒரு குருகுலம் உள்ளது அந்த குருகுலத்தில் அவர்கள் மட்டும்தான் கல்வி கற்க முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. அதில் நீங்களும் நாங்களும் கல்வி கற்க முடியாது.

- Advertisement -

நம்முடைய ஜாதியை சொல்லிக்காட்டி ஒதுக்கி தள்ளி விட்டு நம்மளை அடிமையாகவும் நாம் எதுவும் உரிமை கோராமல் நமக்கு எதுவும் கிடைக்காது என்பதை உருவாக்கி அவர்களை கல்வி கற்க வேண்டும் என்ற இந்த நாட்டை உருவாக்கிக் கொண்டார்கள். திராவிட மாடல் ஆட்சியில் பெரியார் அண்ணா, கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டவர்களால் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்தது.இதில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார்.

சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு அண்ணா, கலைஞர் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்று அவர் கூறினார். இந்தியாவில் பட்டம் பெற்ற பெண்கள் 26 சதவீதம் பேர் என்றும் ஆனால் தமிழ்நாட்டில் பெண்கள் 20 இரண்டு சதவீதம் பேர் படித்து பட்டம் பெற்றுள்ளதாக கூறி அப்பாவு பெருமிதம் அடைந்தார் அதேபோல் ஆண் பெண் என இருபாலரும் இந்தியாவில் பட்டம் பெற்றவர்கள் 34 சதவீதம் பேர் என்று கூறினார்.

-விளம்பரம்-

தமிழ்நாட்டில் 59 சதவீதம் பேர் பட்டம் பெற்றுள்ளதாக தெரிவித்தார் இவ்வாறு எண்ணற்ற பல்வேறு திட்டங்களை இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக தீட்டி செயல்பாட்டால் கலைஞர் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருவதாக பேசினார்.

Advertisement