ஒரு இந்திய இசையமைப்பாளராக, ஆஸ்கர் விருது மற்றும் பல வெற்றிகளைப் பெற்றாலும் – ரஹ்மான் வேதனை.

0
1232
ARRahman
- Advertisement -

பிரபல ஆங்கில பத்திரிகை ஊடகத்தில் வேதனையுடன் ஏ ஆர் ரகுமான் அளித்து இருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலக அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். இவர் குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-
arrahman

கிட்டத்தட்ட இவர் சினிமா உலகில் இசையமைப்பாளராக நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. மேலும், இவர் சர்வதேச அளவில் திரைத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை அதுவும் இரண்டு விருதுகளை வென்று உலக அரங்கில் புகழ் பெற்றவர். தற்போது இவர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் லால் சலாம், அயலான், ஜீனி, கமல் ஹாசன் 234, சங்கமித்ரா, துருவ் விக்ரம் நடிக்கும் படம் போன்ற பல படங்களில் பிசியாக இசை அமைத்து வருகிறார்.

- Advertisement -

ஏ.ஆர்.ரகுமான் இசை கச்சேரி:

மேலும், இவர் படங்களைத் தாண்டி பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி இருக்கிறார். ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் `ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல நகரங்களிலும் நடைபெற திட்டமிட்டு இருக்கிறார்கள். அதோடு வெளிநாடுகளிலும் இந்த இசை கச்சேரி நடக்க இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும், சென்னை பனையூரில் ஏ ஆர் ரகுமான் இசைக் கச்சேரி நடக்க இருப்பதாக கூறப்பட்டது.

ரகுமான் இயக்கிய படம்:

ஆனால், திடீர் மழை பெய்து நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் நீர் பெய்து இருக்கிறது. இதனால் இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டு வேறு ஒரு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. பின் சில வாரங்களுக்கு முன் கோயம்புத்தூரில் ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரி நடந்திருக்கிறது. இதில் ரசிகர்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டிருந்தார்கள். இப்படி ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையைத் தாண்டி தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

ரகுமான் அளித்த பேட்டி:

இவர் இயக்கிய படம் லீ மஸ்க். இந்த படம் கடந்த ஆண்டு புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டிருந்தது. விர்ச்சுவல் ரியாலிட்டி படமாக உருவாகி இருக்கிறது. இந்த படத்தை பார்த்து ரஜினிகாந்த், விக்னேஷ் சிவன், நயன்தாரா உட்பட பல பிரபலங்கள் பாராட்டிருந்தார்கள். இந்நிலையில் இந்த படம் தொடர்பாக ஏ ஆர் ரகுமான் அவர்கள் பிரபல ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், ஒரு இந்திய இசை அமைப்பாளராக ஆஸ்கர் விருது மற்றும் பல வெற்றிகளை நீங்கள் பெறும் போது ஒரு புறா கூட்டினில் அடைக்கப்படுவீர்கள்.

வேதனையில் ரகுமான் சொன்னது:

நான், 127 ஹவர்ஸ் (hours), பீலே (Pele), மற்றும் பல படங்களில் பணியாற்றியபோதும், ஓ ஒரு இந்திய படமா ரகுமானிடம் செல்லலாம் என்ற தேவை இன்னும் உள்ளது. அது மோசமான விஷயம் இல்லை. இருந்தாலும் நான் நிறைய இந்திய படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். எனக்கு இந்திய படங்களில் பணியாற்றுவது ரொம்ப பிடிக்கும். அதில் தான் நான் பெருமை பார்க்கிறேன். ஆனால், இந்தியாவிற்கே தொடர்பில்லாத ஒரு படைப்பை நான் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். ஹாலிஉட்டில் அது மாதிரி செய்வது ரொம்ப கடினமான ஒன்று. ஏனென்றால் இங்கு அனைத்து இடங்களுமே எடுக்கப்பட்டுவிட்டது என்று வேதனையுடன் கூறியிருக்கிறார்.

Advertisement