6.1 மில்லியன் பாலோவர்கள் 73 பேரை மட்டும் பாலோ செய்யும் Ar ரஹ்மான் – லிஸ்டில் இருக்கும் சன் டிவி சீரியல் நாயகி. இது தான் காரணம்.

0
562
Arr
- Advertisement -

சன் டிவி சீரியல் நடிகையை இன்ஸ்டாகிராமில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் பாலோ பண்ணும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே வெள்ளித்திரை பிரபலங்களுக்கு எந்தளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவிற்கு சின்னத்திரை சீரியல் நடிகர்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக கொரோனா தொடங்கிய காலத்திலிருந்து மக்கள் அனைவரும் சின்னத்திரை பக்கம் அதிகம் வருகிறார்கள். இதனால் ஒவ்வொரு சேனலும் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். இதனால் சின்னத்திரை நடிகர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா. இவர் தடை செய்யப்பட்ட டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

-விளம்பரம்-

அதன் மூலம் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பலருக்கும் பரிட்சயமானவர் கேப்ரில்லா. அதற்கு பிறகு இவர் எண்ணற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதுமட்டுமில்லாமல் பல ஷார்ட் பிலிம்களில் கூட கேப்ரில்லா நடித்திருக்கிறார். அதன் பிறகு கடந்த 2019ஆம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் ஐரா. இந்த திரைப்படத்தில் சிறுவயது நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் கேப்ரில்லா. அதனை தொடர்ந்து தற்போது இவர் பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல்:

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் கேப்ரில்லா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார். அதோடு இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. எப்படியாவது ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு எண்ணற்ற இன்னல்களை சமாளித்து வரும் கதாபாத்திரம் தான் சுந்தரி. அதுமட்டுமில்லாமல் சுந்தரி கருப்பு நிறம் என்பதால் நிறத்திற்கும் சாதனை செய்வதற்கும் சம்பந்தமில்லை என்பதை முறியடித்து போராடி வருகிறார். அதனாலே இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் சீக்கிரமாக இடம் பிடித்து விட்டது.

கேப்ரில்லாவை பாலோ செய்யும் ரசிகர்கள்:

மேலும், இந்த சீரியலில் சுந்தரி கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் கேப்ரில்லா. அதுமட்டுமில்லாமல் இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். இதனால் இவர் அடிக்கடி தான் எடுக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்கள், வீடியோக்கள் என அதிகம் பதிவிட்டு வருகிறார். இதனால் இவரை இன்ஸ்டா மற்றும் டிவிட்டரில் எண்ணற்ற ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றார்கள். இந்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்திய இசைப்புயல், இசையின் ஜாம்பவான் ஏ.ஆர்.ரகுமானும் இவரை இன்ஸ்டாவில் பாலோ செய்து வருகிற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை கேப்ரில்லாவை இன்ஸ்டாகிராமில் சுமார் 6.1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாலோ செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இசை ஜாம்பவான் ஏ.ஆர். ரகுமான் இன்ஸ்டா:

ஆனால், நம்ம இசை ஜாம்பவான் ஏ.ஆர். ரகுமான் இன்ஸ்டாவில் பாலோ செய்யும் நபர்களின் எண்ணிக்கை வெறும் 73 பேர் தான். அவர் முக்கியமான நபர்களை மட்டுமே தான் பாலோ செய்வார். அந்த வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இன்ஸ்டாவில் கேப்ரில்லாவை பாலோ செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இன்ஸ்டாவில் முக்கியமான நபர்களில் ஒருவராக கேப்ரில்லா திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது கேப்ரில்லா இதை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, இதை நினைத்து மிகவும் பெருமையாகவும், சந்தோசமாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கடந்த ஆண்டு ஏ ஆர் ரகுமான் அவர்கள் தனிடைய இன்ஸ்டா பக்கத்தில் இவருடைய புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

கேப்ரில்லா இன்ஸ்டா பாலோ:

இப்படி ஏ ஆர் ரகுமான் அவர்கள் நடிகை கேப்ரில்லாவை பாலோ செய்வதற்கும், புகைப்படம் வைப்பதற்கும் காரணம் என்னவென்றால், கடந்த ஆண்டு ‘மூப்பில்லா தமிழ் தாயே’ என்ற ஆல்பம் பாடலை ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்தப் பாடலுக்காக கேப்ரில்லா இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உடன் சேர்ந்து பணியாற்றி இருந்தார். அப்போது எடுத்த புகைப்படத்தை தான் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அப்போதிலிருந்தே கேப்ரில்லாவுக்கும், ஏ.ஆர். ரகுமானுக்கும் நல்ல அறிமுகம். அதனால் தான் ஏ ஆர் ரகுமான் இன்ஸ்டாவில் கேப்ரில்லாவை பாலோ செய்கிறார். தற்போது ஏ.ஆர் ரகுமான் இன்ஸ்டாவில் கேப்ரில்லாவை ஃபாலோ செய்யும் தகவல் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement