இது என் Giftனு சொல்லுங்க – சூர்யா,ஜோதிகா திருமணத்திற்கு முன்பே சர்ப்ரைஸ் கொடுத்துள்ள ரஹ்மான்.

0
1526
Surya
- Advertisement -

சூர்யா- ஜோதிகா திருமணத்திற்கு ஏ ஆர் ரகுமான் கொடுத்திருக்கும் கிப்ட் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான ஜோடிகளாக வலம் வருபவர் சூர்யா- ஜோதிகா. இவர்கள் இருவரும் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக திகழ்பவர்கள். அதிலும் தமிழ் முன்னணி 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் இந்தி படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். பின் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

பிறகு தன்னுடன் நடித்த நடிகர் சூர்யாவை ஜோதிகா காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு ஜோதிகா சினிமாவில் இருந்து கொஞ்சம் ப்ரேக் எடுத்துக்கொண்டார். மேலும், இவர் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து இவர் மகளிர் மட்டும், நாச்சியார், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

ஜோதிகா திரைப்பயணம்:

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த உடன் பிறப்பே படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. அதோடு திருமணத்திற்கு பிறகு ஜோதிகா அவர்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதேபோல் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

சூர்யா திரைப்பயணம்:

அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது சூர்யா அவர்கள் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய க்ளீம்ஸ் வீடியோ வெளியாகியிருக்கிறது. இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதே போல் ஜோதிகாவும் தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

-விளம்பரம்-

ஜில்லுனு ஒரு காதல் படம்:

சமீபத்தில் கூட இவருடைய பிட்னஸ் வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் சூர்யா- ஜோதிகா திருமணத்திற்கு ஏ ஆர் ரகுமான் கொடுத்திருக்கும் கிப்ட் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, சூர்யா- ஜோதிகா இருவருமே இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் தான் இவர்களுடைய காதல் பயணம் தொடங்கியது. அதற்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்திருந்தார்கள்.

ஏ ஆர் ரகுமான் கிடைத்த பரிசு:

மேலும் இவர்கள் இருவரும் கடைசியாக சேர்ந்து நடித்த படம் ஜில்லுனு ஒரு காதல். இந்த படத்தில் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்திருந்தார். அப்போது இந்த படத்தில் கும்மியடி என்ற பாடல் வந்திருக்கும். இந்த படத்தில் சூர்யாவும் ஜோதிகாவுக்கும் திருமணம் ஆனது போல இந்த பாடல் படமாக்கப்பட்டிருக்கும். மேலும், இந்த பாடலை இசை அமைக்கும் போது இயக்குனர் கிருஷ்ணாவிடம் இந்த பாடல் சூர்யா ஜோதிகாவின் திருமணத்திற்கு என்னோட பரிசு என்று ஏ ஆர் ரகுமான் கூறியிருக்கிறார். இதை சூர்யா கேட்டு ஷாக் ஆகி இருக்கிறார். அப்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement