விஜய் டிவி சீரியலுக்கு என்றே பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களெல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. அந்த வகையில் டிஆர்பியில் முன்னிலை வகிக்கும் தொடர்களில் ஒன்றாக இருந்தது சரவணன் மீனாட்சி. இந்த தொடரில் நாயகனாக நடித்தவர் செந்தில். ‘சரவணன் மீனாட்சி’ என்ற தொடரின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் செந்தில்.
அதற்கு முன் இவர் ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜே வாக தான் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். பின் இவர் நடிகர் ஆனார். மேலும், இவர் சரவணன் மீனாட்சி தொடரில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஸ்ரீஜா. சின்னத்திரையில் சூப்பர் ஜோடியாக கலக்கிய இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் கணவன், மனைவியாக ஒன்று சேர்ந்தனர்.
செந்தில் நடித்த படங்கள் :
சரவணன் மீனாட்சி சீரியலுக்கு பிறகு செந்திலுக்கு சினிமாவில் நடிக்க பட வாய்ப்புகள் வந்தது. இவர் தவமாய் தவமிருந்து, செங்காத்து பூமியிலே, கண்பேசும் வார்த்தைகள், வெண்ணிலா வீடு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், சினிமாவில் இவருக்கு மக்கள் மத்தியில் ரீச் கிடைக்காததால் மீண்டும் சின்னத் திரை நோக்கிய பயணம் செய்ய தொடங்கினார். இதனிடையே சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த போதே செந்தில் ஸ்ரீஜாவிற்கு காதல் மலர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
செந்தில் நடித்த சீரியல்கள்:
பின்னர் மீண்டும் இவர் தன் மனைவியுடன் இணைந்து ‘மாப்பிள்ளை’ என்ற தொடரில் நடித்தார். அதுவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பின் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்தார். இந்த சீரியல் இரண்டு பாகங்களாக ஒளிபரப்பாகி இருந்தது. தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியல் நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதனிடையே திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகியும் செந்தில் – ஸ்ரீஜா தம்பதி குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்து வந்தார்கள்.
செந்தில் ஸ்ரீஜா குழந்தை:
இது இவர்களின் ரசிகர்களுக்கு பெரும் குறையாக இருந்து வந்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு ஸ்ரீஜா கர்ப்பமாக இருந்தார். பின் ஸ்ரீஜாவின் வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்று இருக்கிறது. அதன் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியாக பகிர்ந்து இருக்கிறார்கள். இதை அடுத்து இவர்களுக்கு ஒரு அழகான மகன் பிறந்து இருக்கிறார். சமீபத்தில் தான் இவர்களின் மகனின் முகம் தெரியும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு இருந்தார்கள்.
செந்தில் ஸ்ரீஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம்:
பின் கேரளாவின் திருவல்லாவில் இருக்கும் ஸ்ஸ்ரீ வல்லபநாத சுவாமி கோவிலில் அன்னபிரசன்னம் செய்து தன் மகனுக்கு சாப்பாடு ஊட்டி இருந்தார்கள். இந்தநிலையில் செந்தில் ஸ்ரீஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இவர்கள் தன்னுடைய மகன் பிறந்த பிறகு தங்களுடைய முதல் திருமண நாளை கொண்டாடி இருக்கிறார்கள். அப்போது எடுத்த புகைப்படம் வீடியோக்களை எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.