‘இது இந்துஸ்தான் அதனால இந்தில சொல்லுங்க’ – Arன் பொங்கல் ட்வீட்டிற்கு கீழ் கதறிய இந்தி காரர்கள், தமிழர்கள் கொடுத்த பதிலடி.

0
597
arrahman
- Advertisement -

ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமானை இந்தியில் பேசும்படி வட இந்திய நெட்டிசன்கள் நெருக்கடி கொடுத்த சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது. இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார். பின் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து உள்ளார். மேலும், இரண்டு ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றவர். மேலும், உலக அளவில் புகழ்பெற்ற இசை அமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

இருந்தாலும் இவர் தமிழ் மீது தீராத காதல், அன்பும் கொண்டவர். தன்னுடைய தமிழன் என்ற அடையாளத்தை எங்கேயும் விட்டுக்கொடுக்காதவர். பல மேடைகளில் தமிழுக்காக இவர் குரல் கொடுத்திருக்கிறார். மேலும், தமிழ் தெரியாத இடங்களிலும் இவர் தன் தாய்மொழி தமிழில் பேசி இருக்கிறார். முக்கியமாக தமிழர் பிரச்சனை பலவற்றில் குரல் கொடுத்திருக்கிறார். அதோடு வட இந்தியா விருது வழங்கும் விழாக்கள் பலவற்றில் ஏ ஆர் ரகுமான் தமிழில் தான் பேசி இருக்கிறார்.

இதையும் பாருங்க : சமந்தாவை ஓரம்கட்டும் நடிகை தமன்னாவின் ஐட்டம் பாடல் – வைரலாகும் வீடியோ இதோ.

- Advertisement -

ஏ ஆர் ரகுமான் போட்ட தமிழ் டீவ்ட்:

மேலும், தன்னிடம் வேண்டும் என்று ஹிந்தியில் கிண்டலாக பேசும் நபர்களிடம் பதிலுக்கு தமிழில் பேசி பதிலடி கொடுத்து இருக்கிறார். அதே போல் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்புக்கு எதிராக அவ்வப்போது சோசியல் மீடியாவில் தன்னுடைய ஆதரவு கொடுத்து வந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தமிழில் பேசினால் தனக்கு பல சினிமா வாய்ப்புகள் பறிபோய் விடுமோ? என்ற கவலை கொஞ்சம்கூட இல்லாமல் வெளிப்படையாக நான் தமிழன்டா என்று மார்தட்டிக் கொள்ளும் அளவிற்கு தமிழ் வெறியன்.

சர்ச்சையாக்கும் வட இந்தியர்கள்:

இப்படி ஒரு நிலையில் ஏ ஆர் ரகுமான் அவர்கள் பொங்கல் வாழ்த்து சொன்னதை வட இந்தியர்கள் சிலர் சர்ச்சையாகி இருக்கின்றனர். இந்தியா முழுவதும் பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏ ஆர் ரகுமான் தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில் அவர் தமிழில் நீண்ட வாழ்த்து எழுதி பொங்கல் தினத்தை எல்லோரும் மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்று ஏ ஆர் ரகுமான் குறிப்பிட்டிருந்தார்.

-விளம்பரம்-

வெளுத்து வாங்கும் தமிழர்கள்:

இவருடைய போஸ்ட் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி இருந்தது. இதற்கு பலரும் ஆதரவாக கமெண்ட் போட்டிருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் இவர் தமிழில் போஸ்ட் போட்டதை வட இந்தியர்கள் சிலர் விரும்பவில்லை. அவரின் கமெண்ட் பாக்ஸில் பலர் கோபமாக இதற்கு பதில் அளித்து உள்ளார்கள். அதில் அவர்கள், இந்தியாவில் இருக்கும் எல்லோருக்கும் புரியும்படி போஸ்ட் செய்யுங்கள். நீங்கள் இருப்பது இந்துஸ்தானி. இது ஒன்றும் இலங்கை அல்ல. நீங்கள் இந்தியாவின் தாய்மொழியான இந்தியில் தான் பேச வேண்டும் என்று சில வட இந்திய நெட்டிசன்கள் கமெண்ட் செய்திருக்கிறார்கள். இன்னும் சில நெட்டிசன்கள் நீங்கள் தமிழில் பேசினால் புரியாது.

Image

சோசியல் மீடியாவில் பரபரப்பு ஏற்படுத்திய ஏ ஆர் ரகுமான் டீவ்ட் :

இந்தியில் தான் போஸ்ட் செய்ய வேண்டும் என்று விமர்சனம் செய்திருக்கிறார்கள். தமிழர் திருநாளுக்கு ஏ ஆர் ரகுமான் தமிழில் வாழ்ந்து செய்தது ஒரு குத்தமா? இதற்கு வட இந்தியர்கள் ட்வீட் போட்டு பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறார்கள். இதனை பார்த்த தமிழர்கள் பலர் கோபமாக பதில் அளித்து வருகின்றனர். இந்தியருக்கு தாய்மொழி ஹிந்தி என்று யார் சொன்னது? அவர் தமிழர். தமிழர் திருநாள் தமிழில் தான் வாழ்த்து சொல்கிறார். இதில் என்ன தவறு இருக்க முடியும்? என்று தமிழர்கள் அனைவரும் வட இந்தியர்களை வெளுத்து வாங்கி வருகிறார்கள். தற்போது இந்த சர்ச்சை சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement