ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருக்கும் நிலையில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் போட்ட பதிவு பெரும் வைரலானது. இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து உள்ளார். மேலும், இரண்டு ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றவர். மேலும், உலக அளவில் புகழ்பெற்ற இசை அமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான தமிழ் மீது தீராத காதல், அன்பும் கொண்டவர். தன்னுடைய தமிழன் என்ற அடையாளத்தை எங்கேயும் விட்டுக்கொடுக்காதவர். பல மேடைகளில் தமிழுக்காக இவர் குரல் கொடுத்திருக்கிறார். மேலும், தமிழ் தெரியாத இடங்களிலும் இவர் தன் தாய்மொழி தமிழில் பேசி இருக்கிறார். முக்கியமாக தமிழர் பிரச்சனை பலவற்றில் குரல் கொடுத்திருக்கிறார். அதோடு வட இந்தியா விருது வழங்கும் விழாக்கள் பலவற்றில் ஏ ஆர் ரகுமான் தமிழில் தான் பேசி இருக்கிறார்.
இதையும் பாருங்க : லண்டன் மாப்பிள்ளை, மூன்று குழந்தைகள் – ஆளே மாறியுள்ள யூத் பட நடிகை. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.
ரகுமானின் ‘தமிழணங்கு’ பதவு :
மேலும், தன்னிடம் வேண்டும் என்று ஹிந்தியில் கிண்டலாக பேசும் நபர்களிடம் பதிலுக்கு தமிழில் பேசி பதிலடி கொடுத்து இருக்கிறார். அதே போல் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்புக்கு எதிராக அவ்வப்போது சோசியல் மீடியாவில் தன்னுடைய ஆதரவு கொடுத்து வந்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் அதில் ழகரத்தை ஏந்தியிருக்கும் புரட்சிப் பெண்ணின் புகைப்படத்துக்கு கீழே பாரதிதாசனின் ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்’ என்ற வரிகளை பதிவிட்டுள்ளார்.
அமித் ஷா கருத்து :
சமீபத்தில் தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என்றும், உள்துறை அமைச்சகத்தில் 70 விழுக்காடு அலுவல் பணிகள் ஹிந்தியில் மட்டுமே நடைபெறுவதாகவும் னைத்து மாநில மக்களும் உரையாடுவதற்கு பொதுமொழியாக ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்திய மொழி ஒன்று இருக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் ஏ ஆர் ரஹ்மானின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
ரகுமானிடம் கேட்கப்பட்ட கேள்வி :
பலர் ரஹ்மானின் இந்த பதிவு எதிர்ச்சியான ஒன்றே என்று கூறி வந்தாலும், பெரும்பாலானோர். இந்தி திணிப்பிற்கு எதிராகவே ரஹ்மான் இப்படி பதிவு செய்து இருக்கிறார் என்று கூறி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்திய தொழில் கூட்டமைப்பின், தென் மண்டல பிரிவால் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசி இருந்தார், இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு புறப்பட்ட போது அவரை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து சில கேள்விகளை கேட்டனர்.
தமிழ்தான் இணைப்பு மொழி :
அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தியை ஏற்றுகொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளாரே கேள்வி எழுப்பினார். அதற்கு, ஏ.ஆர். ரகுமான்’ தமிழ்தான் இணைப்பு மொழி’ என்று ஒற்றை வரியில் பதிலளித்துவிட்டு காரில் ஏறி புறப்பட்டு சென்று இருந்தார். இதன் மூலம் அமித் ஷாவின் கருத்திற்கு நேரடியாகவே பதில் கூறிவிட்டார் இசைப்புயல்.