‘மிகப்பெரிய அதிர்ஷ்டவசமாக கருதுகிறேன்’ புகைப்படத்தை பகிர்ந்து டிடி நெகிழ்ச்சி – ஆமா, யாருங்க இவரு.

0
339
Dd
- Advertisement -

காலம் கடந்தாலும் மக்கள் மத்தியில் என்றென்றும் இடம்பிடித்திருக்கும் தொகுப்பாளர்கள் என்றால் சிலர் தான். அந்த வரிசையில் 21 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி. அதோடு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிடி என்றால் அனைவருக்கும் தெரியும். அந்த அளவிற்கு சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் பிரபலமானவர் திவ்யதர்ஷினி. மேலும், டிடி தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்தவர்.

-விளம்பரம்-

டிடி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு வந்து விட்டார். பின் திவ்யதர்ஷினி அவர்கள் முதலில் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். அதன் பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அப்படியே டிடி வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். மேலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

- Advertisement -

டிடி திரைப்பயணம்:

இதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதோடு இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். மேலும், இவர் தொகுப்பாளினியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், நடுவராகவும் இருந்து இருக்கிறார். இதனிடையே டிடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் மூன்று வருடங்களே நிலைத்த இவர்களது திருமணம் 2017 ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.

travel பிரியர் :

இவர்களின் விவாகரத்துக்கு பலரும் பல்வேறு விதமான காரணங்களை கூறி வந்தனர். ஆனால், அதையெல்லாம் தாண்டி டிடி தன்னுடய துறையில் ஒரு வெற்றிகரமான பெண் மணியாக திகழ்ந்து வருகிறார். மேலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் டிடி தன்னுடைய ரசிகர்களுக்கு பல முறை மோட்டிவேஷன் கருத்துக்களை கூறி வருகிறார். அதே போல Travel பிரியரான இவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றி வருகிறார்.

-விளம்பரம்-

கனவு நிறைவேறி உள்ளது :

சமீபத்தில் கூட டிடி ஆக்ஸ்போர்ட் யூனிவெர்சிட்டிக்கு விசிட் அடித்து இருந்தார். இதுகுறித்து அவர் பேசுகையில் தான் சிறுவயதில் ஆக்ஸ்போர்ட் யூனிவெர்சிட்டியில் படிக்க வேண்டும் என்று ஆசை பட்டதாகவும், ஆனால் தற்போதுதான் இந்த யூனிவெர்சிட்டிக்கு வந்துள்ளதால் தன்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளதாக கூறி குழந்தை போல துள்ளி குதிக்கிறார். மேலும் டிடி அந்த யூனிவெர்சிட்டியில் பெருமைகளை கூறிவருகையில் தான் இந்த வாய்ப்பை விட்டுவிட்டதாகவும், பின்னர் வரும் மாண்வர்கள் கண்டிப்பாக பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டிடியின் ஐரோப்பிய ட்ரிப் :

மேலும் இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் உணர்வை வார்த்தைகளினால் சொல்ல முடியாது என்றும், நான் இங்கே படிக்க முடியவில்லை என்றாலும் இங்கே வந்து மற்றவர்களுக்கு அறிவுரை கூறவாவது முடிந்துள்ளது என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் டிடி தற்போது இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் டிடி இத்தாலியில் உலக புகழ் பெற்ற மாடல் பிராங்கோ என்பவருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

பிராங்கோவுடன் புகைப்படம் :

இந்த பதிவில் அவர் ’மைக்கேல் ஏஞ்சலோ மற்றும் லியானார்டோ டாவின்சி வாழ்ந்த புளோரன்ஸ் என்ற அழகான நகரத்தில் பழம்பெரும் இத்தாலிய மாடல் பிராங்கோ அவர்களை சந்தித்தது உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டவசமாக கருதுகிறேன்.எனக்காக நேரம் ஒதுக்கிய பிராங்கோ அவர்களுக்கு என்னுடைய நன்றி. இத்தகைய அற்புதமான மனிதரை சந்திப்பதே இந்த பயணத்தின் சிறந்த பகுதி ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார். 

Advertisement