தன் தாய்க்கு பிரம்மாண்ட கல்லறையை கட்டி இருக்கும் ARR – முதலாம் ஆண்டு நினைவு நாளில் வெளியிட்ட உருக்கமான வீடியோ.

0
1403
arr
- Advertisement -

தமிழ் சினிமாவின் இசைப்புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் தன் தாயாருக்கு பிரம்மாண்ட கல்லறையை கட்டி இருக்கிறார். ” இசைப்புயல், மொசார்ட் ஆஃப் மெட்ராஸ்” என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். ஏ.ஆர். ரகுமான் அவர்களின் உண்மையான பெயர் திலீப் குமார். இவர் தன்னுடைய 23வது வயதில் மதகுரு, காத்ரி இஸ்லாமின் வழிகாட்டுதலோடு இஸ்லாம் மதத்தை தழுவினார். இவருடைய அப்பா பெயர் ஆர்.கே.சேகர். இவர் மலையாளத்தில் 50 படங்களுக்கு மேல் இசையமைத்தவர். அதுமட்டுமில்லாமல் ஏ.ஆர். ரகுமானுக்கு சிறுவயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் உடையவர்.

-விளம்பரம்-

ஏ ஆர் ரஹ்மான் :

இவர் சிறுவயதில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான `வொன்டர் பலூன்’ என்ற நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் 4 கீ போர்டுகளை வாசித்துப் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானர். உண்மையிலேயே சொல்லவேண்டுமென்றால் ஏ ஆர் ரஹ்மானுக்கு கம்ப்யூட்டர் இன்ஜினியராக வேண்டும் என்பது தான் சிறு வயது கனவாம். ஆனால், இவர் இசையின் மீது இருந்த ஈடுபாடு காரணமாக 15 வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டார். பின்னர் பல இசைக் கச்சேரிகளில் கலந்து கொண்டு தன்னுடைய தனித்துவத்தை வெளிப்படுத்தி வந்தார்.

- Advertisement -

மேலும், இவர் உதவி தொகை பெற்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் வெஸ்டர்ன் கிளாசிக்கல் மியூசிக் பட்டமும் பெற்றார். அதற்குப் பின்னர் தான் இவர் இளையராஜாவின் இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின் எம்எஸ் விஸ்வநாதன், குன்னக்குடி வைத்தியநாதன், ரமேஷ் நாயுடு உள்ளிட்ட பல இசைக் கலைஞர்களுடன் இவர் பணியாற்றியுள்ளார்.

இசையமைத்த முதல் படம் :

இவர் திரைத்துறையில் இசை அமைப்பதற்கு முன் விளம்பரப் படங்களுக்கு தான் இசையமைத்து வந்தார். மேலும், இவர் முதன் முதலாக இசை அமைத்தது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான “யோதா” என்ற திரைப்படத்துக்கு தான். ஆனால், இந்த படம் வெளியாவதற்கு முன்னர் தமிழில் ரோஜா படம் வெளியானதால் ரோஜா படமே ரகுமானின் முதல் படமாக மாறியது.

-விளம்பரம்-

தாய் மீது கொண்ட அன்பு :

ஏ ஆர் ரஹ்மான் பிறப்பால் இந்து என்றாலும் அவர் விரும்பியே இஸ்லாம் மதத்தை ஏற்றார். அவரது உண்மையான பெயர் திலீப் குமார் தான். அதே போல சிறு வயதிலேயே ஏ ஆர் ரஹ்மான் தன் தந்தையை இழந்து தாயின் வளர்ப்பில் தான் வளர்ந்து வந்தார். அதனால் தன் தாய் மீது எப்போதும் அன்பும் மரியாதையும் உண்டு.

தாய்க்கு பிரம்மாண்ட கல்லறை கட்டிய ரஹ்மான் :

இப்படி ஒரு நிலையில் ஏ ஆர் ரஹ்மானின் தாயார் கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி வயது மூப்பு காரமான காலமானார். இப்படி ஒரு நிலையில் நேற்று தன் தாயின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், தன் தாய்க்கு மிக பெரிய கல்லறையையும் கட்டி இருக்கிறார் ஏ ஆர் ரஹ்மான்.

Advertisement