இந்தி மொழி சர்ச்சை : ஏ. ஆர். ரஹ்மான் பகிர்ந்த ‘தமிழணங்கு’ ஓவித்தை வரைந்தது யார் தெரியுமா ? சச்சினையே வியக்க வைத்த தமிழர்.

0
1077
Santhoshnarayanan
- Advertisement -

ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருக்கும் நிலையில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தமிழ் குறித்து போட்டுள்ள பதிவு பெரும் வைரலாகி வருகிறது. இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து உள்ளார். மேலும், இரண்டு ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றவர். மேலும், உலக அளவில் புகழ்பெற்ற இசை அமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-180-743x1024.jpg

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான தமிழ் மீது தீராத காதல், அன்பும் கொண்டவர். தன்னுடைய தமிழன் என்ற அடையாளத்தை எங்கேயும் விட்டுக்கொடுக்காதவர். பல மேடைகளில் தமிழுக்காக இவர் குரல் கொடுத்திருக்கிறார். மேலும், தமிழ் தெரியாத இடங்களிலும் இவர் தன் தாய்மொழி தமிழில் பேசி இருக்கிறார். முக்கியமாக தமிழர் பிரச்சனை பலவற்றில் குரல் கொடுத்திருக்கிறார். அதோடு வட இந்தியா விருது வழங்கும் விழாக்கள் பலவற்றில் ஏ ஆர் ரகுமான் தமிழில் தான் பேசி இருக்கிறார்.

இதையும் பாருங்க : ஒட்டி உராசியா ராஷ்மிகா – National Crush என்றும் பாராமல் கடுப்பாகி காஜல் போட்ட பதிவை பாருங்க. (கான்டாகிட்டாங்க போல)

- Advertisement -

ஏ ஆர் ரஹ்மான் பதிவிட்ட புகைப்படம் :

மேலும், தன்னிடம் வேண்டும் என்று ஹிந்தியில் கிண்டலாக பேசும் நபர்களிடம் பதிலுக்கு தமிழில் பேசி பதிலடி கொடுத்து இருக்கிறார். அதே போல் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்புக்கு எதிராக அவ்வப்போது சோசியல் மீடியாவில் தன்னுடைய ஆதரவு கொடுத்து வந்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் அதில் ழகரத்தை ஏந்தியிருக்கும் புரட்சிப் பெண்ணின் புகைப்படத்துக்கு கீழே பாரதிதாசனின் ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்’ என்ற வரிகளை பதிவிட்டுள்ளார்.

அமித் ஷாவிற்கு பதிலடியா :

சமீபத்தில் தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என்றும், உள்துறை அமைச்சகத்தில் 70 விழுக்காடு அலுவல் பணிகள் ஹிந்தியில் மட்டுமே நடைபெறுவதாகவும் னைத்து மாநில மக்களும் உரையாடுவதற்கு பொதுமொழியாக ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்திய மொழி ஒன்று இருக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். இதற்கு பலரிடம் இருந்தும் எதிர்புகழ் கிளம்பி இருக்கிறது.

-விளம்பரம்-

ஓவியர் சந்தோஷ் நாராயணன்:

இப்படி ஒரு நிலையில் ஏ ஆர் ரஹ்மானின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அந்த ஓவியத்தை வரைந்த ஓவியர் பற்றிய விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த ஓவியத்தை வரைந்த ஓவியர் பெயர் சந்தோஷ் நாராயணன். இவர் சென்னை கவின் கலை கல்லூரி மாணவர். சமீபத்தில் பா ரஞ்சித் இயக்கத்தில் சமுத்திரகனி நடிப்பில் வெளியான ரைட்டர் படத்தின் இணை எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சினை வியக்க வைத்த சந்தோஷ் :

இவர் தனது பல விதமான தனித்துவமான ஓவியத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தவர். இவர் வரைந்த பல ஓவியங்கள் மிகவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக இவர் இந்திய கிரிக்கெட் உலகில் ஜாம்பவானாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்களை கொண்டு ஓவியத்தை வரைந்து அதை சச்சினுக்கு பரிசளித்தார். அதைப் பார்த்த சச்சின் டெண்டுல்கர் அதன் நுணுக்கமான விஷயங்களைப் பாராட்டியும் இருந்தார்.

Advertisement