ஆஸ்கர் விருதுகள் நடந்த நாளில் தமிழ் குறித்து விவேக் மற்றும் கேப்டன் நடித்த காட்சியை பகிர்ந்து இசைப்புயல் போட்ட ட்வீட்.

0
502
arrahman
- Advertisement -

மறைந்த நடிகர் விவேக் குறித்து ஏ ஆர் ரஹ்மான் தற்போது பதிவிட்டு இருக்கும் ட்வீட், ட்விட்டரில் பலரின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. ர் தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த விவேக் கடந்த சில ஆண்டுக்கு முன்னர் திடீர் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. விவேக்கின் இறப்பிற்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். அந்த வகையில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானும் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார்.

-விளம்பரம்-

ஏ ஆர் ரஹ்மான் அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஏதாவது கவனத்தை ஈர்க்கும் படி பதிவுகளை போட்டுவிடுவார். இப்படி ஒரு நிலையில் நேற்று ஆஸ்கர் விருதுகள் நடைபெற்ற நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் விவேக் மற்றும் விஜயகாந்த் தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்து பேசிய ஒரு படத்தின் காட்சியை பகிர்ந்து ‘காமெடி லெஜெண்ட் விவேக்கை மிஸ் செய்கிறேன். திரை உலகிற்கு எவ்வளவு பெரிய இழப்பு’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

மேலும், இன்று விவேக்கின் பிறந்தநாளும் இல்லை, இறந்த நாளும் இல்லை. அப்படி இருக்கையில் விவேக்கின் இந்த வீடியோவை ஏ ஆர் ரஹ்மான் பகிர காரணம் என்ன ? அதுவும் குறிப்பாக தமிழ் குறித்து பேசும் இந்த குறிப்பிட்ட வீடியோவை பகிர காரணம் என்ன ? மேலும், ஏ ஆர் ரஹ்மான் மிகுந்து தமிழ் பற்றாளர் என்பது பலரும் அறிந்த ஒன்று தான். அதே போல தமிழ் மொழிக்காக பல thug சம்பவங்களை ஏ ஆர் ரஹ்மான் செய்து இருக்கிறார்.

உதாரணமான சில சம்பவங்களை கூறலாம் ஆங்கிலத்தின் பயன்பாட்டை குறைத்து கொண்டு , அதிக அளவில் இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா 37வது பாராளுமன்ற மொழிக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இது பிற மொழியை தாய் மொழியாக கொண்ட தென்னிந்திய மாநிலங்களுக்குள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் , ஏ ஆர் ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் ’தமிழணங்கு’ என்றும் ’இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்னும் பாரதிதாசன் வாசகம் எழுதப்பட்டிருந்த தமிழன்னை புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்தார்.

-விளம்பரம்-

அதே போல சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலிவுட்டில் நடைபெற்ற ஒரு விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை அறிவிப்பதற்காக ஏ.ஆர்.ரகுமான் மேடைக்கு அழைத்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் சிறந்த நடிகருக்கான விருது ரன்வீர் அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்று தமிழில் பேசி விருதைய அறிவித்தார். இது அங்கிருந்த தமிழ் சினிமாவை சார்ந்த அனைவரையும் அதிர்ச்சி ஆழ்த்தியது.

ஏ.ஆர்.ரகுமான் செந்தமாக கதை எழுதி இசையமைத்த படம் தான் 99. இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்று சென்னையில் நடந்து கொண்டிருந்தது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த தொகுப்பாளர் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் திடீரென இந்தி மொழியில் பேச தொடங்கி விட்டார் வெடுக்கன தலையை திருப்பி இந்தி….. எனக் கேட்ட ஏ ஆர் ரகுமான் சற்றும் யோசிக்காமல் வேகமாக மேடையை வட்டு இறங்கத் தொடங்கினார்.

2019 ஆம் ஆண்டு மூன்று மொழிக் கொள்கை என மத்திய அரசு கல்வி திட்டத்தில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்திய கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற பானியல் இருந்தது இதற்கு ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பஞ்சாபிலும் தமிழ் பரவுகிறது என்று பஞ்சாப் சிங்கர் ஒருவர் பாடும் பாடலை தனது டூவீட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement