அடேங்கப்பா,விஜய் ஆண்டனிக்கு இவ்ளோ பெரிய மகளா – அவரது மனைவி வெளியிட்ட புகைப்படம்.

0
617
Vijayantony
- Advertisement -

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என பன்முகன்ங்களை கொண்ட விஜய் ஆண்டனி எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடுமையான உழைப்பினால் சினிமா உலகில் நுழைந்து முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருக்கிறார். இவர் முதலில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தான் அறிமுகமானார். பின்னர் நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு வருகிறார் .இவர் கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 1975 ஆம் ஆண்டு பிறந்தவர்.

-விளம்பரம்-

இவருடைய தந்தை 7 வயது இருக்கும் போதே இறந்து விட்டார். பின் இவர் தன் தாய் கவனிப்பில் கஷ்டப்பட்டு படித்து முன்னேறி சினிமா துறைக்குள் நுழைந்தார். 2005 ஆம் ஆண்டு வெளியான சுக்ரன் படத்தின் மூலம் தான் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

- Advertisement -

விஜய் ஆண்டனி திரைப்பயணம்:

மேலும், விஜய் ஆண்டனி படங்களுக்கு ஒரு இசையமைப்பாளராக மட்டும் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்து ஹீரோவாக நடிக்கலாம் என்று முடிவெடுத்தார். பின் 2012-ஆம் ஆண்டு வெளி வந்த நான் படத்தின் மூலம் ஹீரோவாக தன் திரை பயணத்தை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து இவர் சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன் என பல படங்களில் நடித்து இருக்கிறார்.

விஜய் ஆண்டனி குறித்த தகவல்:

பெரும்பாலும் இவர் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. தற்போது இவர் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு தொங்கிய பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு தொடங்கு விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் ஜெட் ஸ்கியில் சென்று கொண்டிருக்கும் போது பெரிய விபத்து ஏற்பட்டது. அதில் முகத்தில் பலத்த காயமடைந்த விஜய் ஆண்டனி தற்போது தேறி மீண்டும் படப்பிடிப்பு கலத்திற்கு திரும்பியுள்ளார்.

-விளம்பரம்-

விஜய் ஆண்டனி மனைவி :

இந்நிலையில் கடந்த 2006ஆம் ஆண்டு பாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2005 வெளியான சுக்ரன் படத்தின் மூலம் அறிமுகமான இவர் பின்னர் நான் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். அந்த படத்தை தயாரித்தது அவரது மனைவி பாத்திமா தான். இவரது மனைவி பாத்திமா டீவி தொலைக்காட்சி ஒன்றில் தொகுபலினியாக பணியாற்றி வந்தார் பின்னர் விஜய் ஆண்டனியை பேட்டி எடுக்க சென்ற போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. அதன் பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகளும் இருக்கின்றனர்.

வைரல் புகைப்படம் :

மேலும் பாத்திமா விஜய் ஆண்டனி நடித்த பல படங்களை தயாரித்துள்ளார். விஜய் ஆண்டனியை ஒரு பெரிய நடிகராக வரவழைக்க வேண்டும் என்பது பாத்திமாவின் ஆசை. அதற்கு ஏற்றார் போல அவர் கதைகள் தேர்வு செய்து கொடுப்பாராம். இந்த நிலையில் பாத்திமா ஆண்டனி தன்னுடைய மகளின் புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகவே விஜய் ஆண்டனிக்கு இவளவு பெரிய மகளா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement