பாலிவுட்டில் நான் படம் பண்ணைக்கூடாதுனு ஒரு கூட்டமே இருக்கிறது – ஏ ஆர் ரஹ்மான் ஷாக்கிங் பேட்டி.

0
983
ar
- Advertisement -

பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் மரண செய்தி கேட்டு பிரதமர் தொடங்கி அரசியல் பிரபலங்களும், திரைபிரபலங்கள் மற்றும் முன்னணி கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் என பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். சுஷிநாத் இறந்ததற்கு காரணம் பாலிவுட் சினிமா துறையில் இருக்கும் வாரிசு அரசியல் தான் காரணம் என்று பலரும் கூறி வந்தனர்.

-விளம்பரம்-
AR Rahman

மேலும், பாலிவுட்டில் இருக்கும் பல்வேறு பிரபலங்களும் வாரிசு அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இசைபுயல் ஏ ஆர் ரஹ்மானும் பாலிவுட்டில் நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார். சமீபத்தில் சுஷாந்த் நடிப்பில் வெளியான Dil Bechara திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை இயக்குனர் முகேஷ் சாப்ரா இயக்கியுள்ளார். இந்த படத்தில் சுஷாந்துக்கு ஜோடியாக சஞ்சனா நடித்துள்ளார்.

- Advertisement -

இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் தான் இசையமைத்து இருக்கிறார். இந்த நிலையில் ரேடியோ மிர்ச்சி எம் எம் சேனலில் ஆர் ஜே சுரன் என்பருடன் ஏ ஆர் ரஹ்மான் பேட்டி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அந்த ஆர் ஜே, ஏன் நீங்கள் அதிக ஹிந்தி படங்களில் அதிகம் பணியாற்றுவது இல்லை என்று கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த ஏ ஆர் ரஹ்மான், நான் நல்ல படங்களை என்றுமே வேண்டாம் என்று சொன்னதில்லை .ஆனால், எனக்கு எதிராக ஒரு கூட்டம் தவறாக புரிந்து கொண்டு இது போன்ற வதந்திகளை பரப்புகிறார்கள். முகேஷ் சோப்ரா என்னிடம் வந்தபோது அவருக்கு இரண்டு நாளில் நான்கு பாடல்களை நான் கொடுத்தேன். அப்போது அவர் என்னிடம் சொன்னார், பலபேர் உங்களிடம் செல்ல வேண்டாம் என்று சொன்னார்கள் உங்களைப் பற்றி கதை கதையாக சொன்னார்கள் என்று கூறினார்..

அவர் அப்படி சொன்னதற்கு பின்னர் தான் எனக்கு புரிந்தது, நான் ஏன் குறைவான இந்தி படங்களை செய்கிறேன் என்று. அதனால்தான் எனக்கு நல்ல படத்தில் வாய்ப்பும் வருவது கிடையாது. ஏனெனில் ஒரு கூட்டமே எனக்கு எதிராக வேலை செய்து கொண்டு இருக்கிறது என்று. அவர்கள் என்ன தவறை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று புரியாமலேயே அதை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்னொரு கூட்டம் இவற்றிலிருந்து என்னை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. நான் விதியை நம்புபவன் அனைத்தும் கடவுளிடம் இருந்து தான் வருகிறது என்பதை நான் நம்புகிறேன். எனவே, யார் வேண்டுமானாலும் என்னிடம் வரலாம் நீங்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறீர்கள் என்று கூறியுள்ளார் ரகுமான்

-விளம்பரம்-
Advertisement