இசை நிகழ்ச்சியை பாதியில் நிறுத்திய போலீஸ், குவியும் கண்டனங்கள் – புனே இசை நிகழ்ச்சியின் வீடியோவை பகிர்ந்து Ar போட்ட பதிவு.

0
561
ARRahman
- Advertisement -

ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியை போலீஸ் பாதியிலேயே தடுத்து நிறுத்தி இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்திஇருந்த நிலையில் தற்போது புனேவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இருந்து சிறிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் ஏ ஆர் ரஹ்மான். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ராஜ் பகதூர் மில்ஸ் பகுதி அருகே இருக்கும் திறந்தவெளியில் ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சி சினிமா லைப்மென்ட்ஸுக்கு நிதி திரட்டுவதற்காக நடைபெற்றது. மேலும், இந்த நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அந்த பகுதியில் குவிந்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சி மாலையில் தொடங்கப்பட்டது. இதில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியாகியிருந்த பல பாடல்கள் இசையமைக்கப்பட்டது. பின் இரவு 10 மணி ஆனதும் ஏ ஆர் ரகுமான் ‘தில் சே’ படத்தில் இடம் பெற்ற ‘சைய்ய சைய்யா’ என்ற பாடலை பாடத் தொடங்கினார்.

- Advertisement -

ஏ.ஆர்.ரகுமான் இசையை நிறுத்திய போலீஸ்:

அப்போது போலீஸ்காரர் ஒருவர் மேடையின் மீது எறி தன்னுடைய வாட்ச்சை காண்பித்து நிகழ்ச்சியை நிறுத்துங்கள் என்று கையசைத்து இருக்கிறார். ஆனால், சில இசை கலைஞர்கள் அதை கவனிக்காமல் இசைத்துக் கொண்டே இருந்தார்கள்.இதனால் கோபம் அடைந்த போலீஸ் இசை கலைஞர்களுடைய அருகில் சென்று உடனடியாக இசையை இசைப்பதை நிறுத்துங்கள் என்று கூறியிருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் பயங்கரமாக சத்தம் போட்டு கூச்சலிட்டு இருக்கின்றனர்.

குவியும் கண்டனங்கள் :

பின் ஏ ஆர் ரகுமான் போலீசாரின் வலியுறுத்தலுக்கு இணங்கி மேடையில் இருந்து இறங்கினார். இதனால் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கூட்டத்திற்கு இடையில் பயங்கர சலசலப்பு ஏற்பட்டிருந்தது. தற்போது இது தொடர்பான வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும், DisRespectOfARRahman என்ற ஹேஷ் டேக்கை பகிர்ந்து தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

ஏ ஆர் ரஹ்மான் பகிர்ந்த வீடியோ :

இப்படி ஒரு நிலையில் இந்த இசை நிகழ்ச்சியின் சிறிய வீடியோ ஒன்றை தன்னுடைய பிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஏ ஆர் ரகுமான். அதில் ‘நேற்று நாம் அனைவரும் ராக் ஸ்டார் தருணத்தை மேடையில் அனுபவித்தோமா ? ஆம் என்று தான் நினைக்கிறேன். பார்வையாளர்களின் அன்பில் மூழ்கினோம். பூனே ஒரு மறக்க முடியாத மாலையை தந்ததற்கு மீண்டும் ஒருமுறை நன்றி’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement