போதும் நிறுத்துங்க,பீட்டர் பவுல் என் கணவரும் இல்ல, யார் சாவுக்கும் நான் வருத்தப்படவும் இல்ல – பகீர் கிளப்பிய வனிதா

0
598
Vanitha
- Advertisement -

பீட்டர் பவுல் தனது கணவர் இல்லை என்றும் தான் இப்போதும் சட்ட ரீதியாக சிங்கிளாக தான் இருக்கிறேன் என்றும் வனிதா விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் – மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் நடித்தார். பின் சினிமாவில் இருந்து இவர் சில காலம் விலகி இருந்தார். திருமணத்துக்கு பின்னர் வனிதா படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார்.

-விளம்பரம்-

இதையடுத்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதாவிற்கு இரண்டு முறை விவாகரத்து ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் தன் தந்தையுடன் பிரச்சனை காரணமாக தன்னுடைய இரண்டு மகள்களுடன் வனிதா தனித்தனியாக வசித்து வருகிறார். மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டிருந்தார்.

- Advertisement -

இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். பின் கடந்த 2020 ஆண்டு பீட்டர் பவுல் என்பவரை வனிதா மூன்றாவது திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்று செய்திகள் வெளியானது. மேலும், பீட்டர் பவுலை தனது வீட்டிலேயே கிறிஸ்துவ முறைப்படி ஏற்றுக்கொண்டார். ஆனால், அது வெறும் அன்பின் பரிமாற்றம் தான் திருமணம் இல்லை என்றும் கூறி இருந்தார் வனிதா.

ஆனால், அவருடன் காதலில் விழுந்த சில மாதங்களிலேயே பீட்டர் பாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பீட்டர் பவுல் திடீர் மரணமடைந்தார். இந்த நிலையில் பீட்டர் பவுலின் இறப்பிற்கு பின் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இரங்கல் தெரிவித்து வனிதா பதிவு ஒன்றை கூட போட்டு இருந்தார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் பீட்டர் பவுல் தனது கணவர் இல்லை என்றும் தான் இப்போதும் சட்ட ரீதியாக சிங்கிளாக தான் இருக்கிறேன் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார் வனிதா. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘சரி ரொம்ப பொறுமையா யோசிச்சு ரியாக்ட் பண்ணலாமா வேண்டாமா பார்த்தேன்.எல்லா மீடியா, பத்திரிக்கை & நியூஸ் சேனல்களையும் ஞாபகப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. நான் மறைந்த பீட்டர் பாலை ஒருபோதும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை.

2020 ஆம் ஆண்டு நாங்கள் ஒரு சுருக்கமான உறவில் இருந்தோம். அது அதே ஆண்டு முடிவடைந்தது. நான் அவருடைய மனைவி அல்ல. அவர் என் கணவர் அல்ல. என் கணவர் இறந்துவிட்டதாக செய்தி பரப்புவதை நிறுத்துங்கள். நான் மிகவும் சட்டப்பூர்வமாக தனிமையில் இருக்கிறேன். கணவர் இல்லை, எந்த இழப்புக்கும் நான் வருத்தப்படவில்லை.

நான் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறேன். இது ஒரு தாழ்மையான வேண்டுகோள். ஒருமுறை மக்கள் மற்றவர்களைப் பற்றி விமர்சிப்பதையோ அல்லது கிசுகிசுப்பதையோ நிறுத்திவிட்டு உங்கள் வாழ்க்கையை கவனித்துக் கொள்ளுங்கள்.ஒவ்வொருவருக்கும் வாழவும், எதைச் செய்ய விரும்புகிறதோ அதைச் செய்யவும் உரிமை உண்டு” என்று குறிப்பிட்டு உள்ளார்.

Advertisement