என்ன ப்ரோ, தமிழ் தான் இணைப்பு மொழின்னு சொன்னீங்க – ரகுமானின் இந்தி டீவீட்டை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
698
arr
- Advertisement -

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருந்த நிலையில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் போட்ட பதிவு பெரும் வைரலானது. இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து உள்ளார். மேலும், இரண்டு ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றவர். மேலும், உலக அளவில் புகழ்பெற்ற இசை அமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான தமிழ் மீது தீராத காதல், அன்பும் கொண்டவர். தன்னுடைய தமிழன் என்ற அடையாளத்தை எங்கேயும் விட்டுக்கொடுக்காதவர். பல மேடைகளில் தமிழுக்காக இவர் குரல் கொடுத்திருக்கிறார். மேலும், தமிழ் தெரியாத இடங்களிலும் இவர் தன் தாய்மொழி தமிழில் பேசி இருக்கிறார். மேலும், தன்னிடம் வேண்டும் என்று ஹிந்தியில் கிண்டலாக பேசும் நபர்களிடம் பதிலுக்கு தமிழில் பேசி பதிலடி கொடுத்து இருக்கிறார்.

- Advertisement -

ரகுமானின் ‘தமிழணங்கு’ பதிவு :

அதே போல் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்புக்கு எதிராக அவ்வப்போது சோசியல் மீடியாவில் தன்னுடைய ஆதரவு கொடுத்து வந்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் அதில் ழகரத்தை ஏந்தியிருக்கும் புரட்சிப் பெண்ணின் புகைப்படத்துக்கு கீழே பாரதிதாசனின் ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்’ என்ற வரிகளை பதிவிட்டு இருந்தார்.

அமித் ஷாவின் இணைப்பு மொழி சர்ச்சை :

சமீபத்தில் தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என்றும், உள்துறை அமைச்சகத்தில் 70 விழுக்காடு அலுவல் பணிகள் ஹிந்தியில் மட்டுமே நடைபெறுவதாகவும் னைத்து மாநில மக்களும் உரையாடுவதற்கு பொதுமொழியாக ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்திய மொழி ஒன்று இருக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் ஏ ஆர் ரஹ்மானின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

இணைப்பு மொழி குறித்து ஏ ஆர் :

அதே போல ஏ ஆர் ரஹ்மானின் இந்த பதிவிற்கு பின்னர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கிளம்பி சென்ற போது பத்திரிக்கையாளர் ஒருவர் இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தியை ஏற்றுகொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளாரே கேள்வி எழுப்பினார். அதற்கு, ஏ.ஆர். ரகுமான்’ தமிழ்தான் இணைப்பு மொழி’ என்று ஒற்றை வரியில் பதிலளித்துவிட்டு காரில் ஏறி புறப்பட்டு சென்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியில் பதிவிட்டுள்ள ரஹ்மான் :

இந்நிலையில், தற்போது ஹிந்தி படம் ஒன்றின் குறித்த அறிவிப்பை ஹிந்தியிலேயே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ரகுமான். இதனை பார்த்த நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். அதிலும் ஒரு சிலர் ‘நீயெல்லாம் அவ்வளவு உஷாரு…. நீ மட்டும் ஹிந்தி கத்துகிட்டு சம்பாதிக்க வேண்டும். அடுத்தவன் உன் தமிழ் தத்துவத்தை கேட்டு வெலங்காம போகனும்… சூப்பர்’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement