பிரபல நடிகர் அட்ஜஸ்ட் பண்ண சொன்னாரு, பல வாய்ப்புகளை இழந்தேன் – விஜய் பட நடிகையின் திடீர் குற்றச்சாட்டு

0
661
isha
- Advertisement -

பிரபல நடிகர் ஒருவர் தன்னை அட்ஜஸ்ட் செய்ய சொல்லியதாக பாலிவுட் நடிகை இஷா கோபிகர் குற்றம் குற்றம்சாட்டிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து இருப்பவர் நடிகை இஷா கோபிகர். இவர் தமிழில் அகத்தியன் இயக்கிய காதல் கவிதை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் இவர் அரவிந்த்சாமி உடன் என் சுவாச காற்றே, கேப்டன் விஜய்காந்தின் நரசிம்மா, தளபதி விஜய்யின் ‘நெஞ்சினிலே’ உட்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-
Isha Koppikar being transparent about her casting couch experience

மேலும், இவர் சில தமிழ் படங்களில் நடித்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். அதன் பின் பாலிவுட்டில் செட்டில் ஆகி விட்டார். இவர் அதிகமாக ஹிந்தியில் தான் எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும், இஷா கோபிகர் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இதனிடையே நடிகை இஷா கோபிகர் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

இஷா கோபிகர் குடும்பம்:

திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு மகளும் பிறந்தார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். தற்போது இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் “அயலான் ” படத்தில் நடித்து வருகிறார். இன்று நேற்று நாளை படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ரவிக்குமார். தற்போது இவர் சிவகார்த்திகேயன் வைத்து அயலான் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

அயலான் படத்தில் இஷா கோபிகர்:

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். அதோடு படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படம் ஏலியன் சம்பந்தப்பட்ட படம் என்றும் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார் இஷா கோபிகர். இந்த படத்தின் மூலம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் கழித்து தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கவிருக்கிறார் நடிகை இஷா கோபிகர்.

-விளம்பரம்-

இஷா கோபிகர் அளித்த பேட்டி:

இந்நிலையில் பிரபல நடிகர் ஒருவர் தன்னை அட்ஜஸ்ட் செய்ய சொல்லி இருக்கிறார் என்று இஷா கோபிகர் குற்றம்சாட்டி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் பாலிவுட் நடிகை இஷா கோபிகர் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, சினிமாவுக்காக அட்ஜஸ்ட் செய்யக்கோரி வற்புறுத்தும் நிலைமை இங்கே அதிகமாக உள்ளது. நானே ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனபோது பிரபல நடிகருடன் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் வற்புறுத்தினார்.

பிரபல நடிகர் மீது ஈஷா குற்றச்சாட்டு:

ஆனால், நான் முடியாது என்று சொல்லி விட்டதால் அந்த படத்தில் இருந்து என்னை நீக்கி விட்டார்கள். இதேபோல் பல படங்களில் அட்ஜஸ்ட் செய்யாமல் இருந்ததால் தான் நான் பல திரைப்பட வாய்ப்புகளை இழந்து விட்டேன் என்று கூறி இருக்கிறார். இப்படிஈஷா கோபிகர் குற்றம்சாட்டி இருக்கும் அந்த பிரபல நடிகர் குறித்து சோசியல் மீடியாவில் பல கேள்விகள் எழுந்து வருகிறது. அதோடு இஷா கோபிகர் குற்றச்சாட்டால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Advertisement