இந்த கால தலைமுறையை நினைத்து பாவமா இருக்கு – ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த வீடியோ

0
357
ARRahman
- Advertisement -

இளம் தலைமுறையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது என்று ஏ ஆர் ரகுமான் பதிவிட்டிருக்கும் ட்விட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த ஓப்பன் ஏஐ என்ற நிறுவனம் ‘சாட் ஜிபிடி’ என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மென்பொருளை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்தது. இது ஏதாவது ஒரு தலைப்பை இந்த மென்பொருளில் உள்ளீடு செய்தால் அது தொடர்பான தகவல்களை தொகுத்து தரும்.

-விளம்பரம்-
arrahman

மொழி சார்ந்த செயல்பாடுகளை மிக அதிவேகமாக இந்த ‘சாட் ஜிபிடி’ செய்து தருகிறது. மேலும், இந்த ‘சாட் ஜிபிடி’ பல்வேறு துறைகளில் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டு வரும் என்று நிபுணர்கள் கூறியிருக்கின்றனர். அதே சமயம் இதை தவறான முறையில் கையாண்டால் மனித குலத்துக்கு பாதிப்பு என்றும் எச்சரித்து இருக்கிறார்கள். இதனை அடுத்து சீனாவில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுடைய கவனிப்பு திறனை கையாள இந்த செயற்கை நுண்ணறிவு கருவியை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

- Advertisement -

செயற்கை நுண்ணறிவு கருவி:

அதாவது, இந்த கருவியை மாணவர்களின் தலையில் மாட்டி விட்டால் வகுப்பில் ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை அவர்கள் கவனிக்கிறார்களா? கவனிக்கவில்லையா? வேறு என்ன சிந்தனையில் இருக்கிறார்கள்? என்பதை இந்த கருவி கண்டுபிடித்து விடும். பின் இதை ஆசிரியர்களும் மாணவர்களுடைய தகவல்களைப் பற்றி பெற்றோர்களுக்கு அனுப்பி விடுவார்கள். இது தொடர்பான வீடியோ தான் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது.

ஏ ஆர் ரகுமான் டீவ்ட்:

இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்த ஏ ஆர் ரகுமான் அவர்கள் தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்து, இளம் தலைமுறையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. அவர்கள் ஒரே நேரத்தில் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும், சபிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்களா? காலம் பதில் சொல்லும்? என்று கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து பலருமே அவருடைய பதிவிற்கு ஆதரவாக கமெண்ட் போட்டு இருந்தார்கள். அதேபோல் இசையமைப்பாளர் தமனும், இது முற்றிலும் உண்மை சார் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

ஏ.ஆர்.ரகுமான் திரைப்பயணம்:

இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் சிறுவயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் உடையவர். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார் ரகுமான் . இவர் தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். அதன் பின் இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இசையமைத்து கொடுத்திருக்கிறார். மேலும், இவர் மேற்கத்திய இசையை மக்களுக்கு கொண்டு சென்றவர்.

Arrahman

ஏ.ஆர்.ரகுமான் குறித்த தகவல்:

இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். அதுமட்டும் இல்லாமல் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தமிழ் மீது தீராத காதல், அன்பும் கொண்டவர். சர்வதேச அளவில் திரைத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை அதுவும் இரண்டு விருதுகளை வென்று உலக அரங்கில் தமிழை தலைநிமிரச் செய்தவர் ரகுமான். இப்படி குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார் ரகுமான்.

Advertisement