ரஹ்மானின் முன்னேற்றத்துக்குக் காரணம் இவர் உருவாக்கிய அந்த ஸ்டூடியோதான் – பிரபல கலைஞரின் இறப்பு குறித்து ARன் சகோதரி

0
252
- Advertisement -

ஏ ஆர் ரகுமானின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்த பஞ்சதன் ஸ்டுடியோ உரிமையாளர் எம்மி பால் இறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலக அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். இவர் குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது ஏ ஆர் ரகுமான் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் லால் சலாம், அயலான், ஜீனி, கமல் ஹாசன் 234, சங்கமித்ரா, துருவ் விக்ரம் நடிக்கும் 234, போன்ற பல படங்களில் கமிட்டாகி பிசியாக இசை அமைத்து இருக்கிறார். மேலும், இவர் படங்களைத் தாண்டி பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரி நடத்தி இருந்தார். இந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவியாக இருந்த எம்மி பால் இறந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

ஏ ஆர் ரகுமான் திரைப்பயணம்:

இசை துறையில் ஏ ஆர் ரகுமான் இந்த அளவிற்கு உயர்ந்திருப்பதற்கு காரணம் பஞ்சதன் ஸ்டுடியோ தான். ஏ ஆர் ரகுமான் உடைய ஆரம்ப கால பாடல்கள் எல்லாம் இங்கு தான் உருவாக்கப்பட்டது. இந்த பஞ்சதன் ஸ்டுடியோ தான் ஏ ஆர் ரகுமானுக்கு தாய் வீடு என்று சொல்லலாம். இது ஏ ஆர் ரகுமானுக்கு மட்டும் இல்லாமல் ஜிவி பிரகாஷ், ஏ ஆர் ரைஹானா போன்ற பல இசையமைப்பாளர்களை உருவாக்கி இருக்கிறது. இப்படிப்பட்ட பஞ்சதன் ஸ்டுடியோவை உருவாக்கிய சவுண்ட் இன்ஜினியரிங், ஸ்டுடியோ டிசைனர் எம்மி பால். தற்போது இவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

எம்மி பால் மறைவு:

இது குறித்து எம்மி பாலின் மறைவிற்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், என்னுடைய பெரும்பாலான பாடல்களும் இசையும் உருவாக்கப்பட்ட இடம் பஞ்சதன் ஸ்டுடியோ தான். அந்த ஸ்டுடியோவின் நிஜ கட்டிட கலைஞரான எம்மி பாலின் மறைவிற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். இவரைத் தொடர்ந்து ஏ ஆர். ரகுமானின் சகோதரி ரஹைனா பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், எம்மி பால் சாரோட மறைவு உண்மையிலேயே எங்களுக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது.

-விளம்பரம்-

ஏ ஆர். ரகுமானின் சகோதரி பேட்டி:

காரணம், ரகுமான் மட்டும் இல்லாமல் என்னோடு ஸ்டுடியோவையும், பிரகாஷ் ஸ்டுடியோவையும் அவர்தான் கட்டிக் கொடுத்தார். எங்க குடும்பத்தோட ஃபேவரட் சவுண்ட் இன்ஜினியர் அவர் தான். முக்கியமாக எங்க அம்மாவுக்கு அவரை ரொம்ப பிடிக்கும். காசு இருந்தால் அதற்கேற்ற மாதிரியும், காசு இல்லை என்றால் அதற்கு ஏற்ற மாதிரியும் பண்ணிக் கொடுப்பாரு. சில நேரத்தில் பஞ்சதன் ஸ்டுடியோவை உருவாக்க அம்மாவிடம் பணம் வாங்காமல் கூட இருந்திருப்பார். அது அம்மாவுக்கு தான் தெரியும். அவ்ளோ மரியாதை வைத்திருந்தார். கணவரை இழந்தவர் என்பதால் என் அம்மாவிடம் ரொம்ப கனிவாக கருணையோடு நடந்து கொண்டார்.

எம்மி-ரகுமான் உறவு:

இந்த பஞ்சதன் ஸ்டூடியோ கட்டுவதற்கு முன்பு ரகுமான் பிரசாத் ஏவிஎம் ஸ்டுடியோவில் தான் போய் மியூசிக் பண்ணிட்டு வருவார். ரொம்ப நேரம் வெயிட் பண்ணனும். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் பணம் கட்டணும். இப்படி பல பிரச்சினைகள் இருந்தது. அதற்குப் பிறகுதான் எம்மி பால் உதவி செய்தார். ரகுமானோட முன்னேற்றத்தையும் பஞ்சதன் ஸ்டுடியோவையும் பிரிக்கவே முடியாது. எம்மி சார் பஞ்சதன் ஸ்டுடியோ உருவாக்கின பிறகு தான் இசைக்கருவிகள் எல்லாம் வாங்கி வைத்து ஸ்டுடியோவை மணிரத்தினம் சாரிடம் எல்லாம் காட்ட முடிந்தது. ஸ்டுடியோ இருக்கின்ற நம்பிக்கையில் தான் ஏகுமானுக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். எங்கள் வாழ்க்கையும் மாறியது. எம்மி-ரகுமான் ரொம்ப நெருக்கம். இருவரிடமும் நல்ல நட்பு இருந்தது. எங்களை விட ரஹ்மானுக்கு இது இன்னும் பெரிய இழப்பு என்று வேதனையுடன் கூறி இருக்கிறார்.

Advertisement